பாலுமகேந்திராவின் சிஷ்யர்களில் ஒருவரான சுகா இயக்கத்தில் ஆர்யா தயாரித்த படித்துறை படம் முற்றிலுமாக ட்ராப் செய்யப்பட்டிருக்கிறது. இதனை சுகா தெரிவித்துள்ளார். ஆர்யா தனது ஷோ தி பீப்பிள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்த படம் படித்துறை.
எடுத்தவரை பிடிக்காததால் ஆர்யா மேற்கொண்டு படத்தை தயாரிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆர்யா பணம் போடுவார் படத்தை முடிக்கலாம் என்ற காத்திருந்த சுகா தனது பொறுமையின் விளிம்பை கடந்துவிட்டார். இனி படித்துறை படம் பற்றி கேட்காதீர்கள் என்று நண்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பவர், விரைவில் அடுத்தப் படத்தை தொடங்கயிருப்பதாக தெரிவித்துள்ளார்.
படித்துறைக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். தனது புதிய படத்துக்கும் அவரே இசை என குறிப்பிட்டுள்ளார் சுகா.