கூகுள் நிறுவனம் தனது முதல் டேப்லட்டான நெக்சஸ்-7னை அறிமுகப்படுத்த உள்ளது. கூகுள் ஐஓ கண்காட்சியில் அறிமுகமான இந்த நெக்சஸ்-7 டேப்லட் புதிய ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது. இந்த டேப்லட்டிற்கு, அமெரிக்கா, கன்னடா மற்றும் ஆஸ்ட்ரேலியாவில் ப்ரீ-ஆர்டர் ஆரம்பமாகிவிட்டது. ஜூலை மாதம் இந்த டேப்லட் வெளியாகும். 4.1 ஜெல்லி பீன்
ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த டேப்லட் 7 இஞ்ச் திரை கொண்டது. என்வீடியா டெக்ரா 3 பிராசஸர் கொண்ட இந்த டேப்லட் 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தில் தகவல்களை தெளிவாக காட்டும். கூகுள் ப்ளேயில் இந்த டேப்லட்டினை ரூ. 11,347 விலைக்கு பெறலாம். ஆப்பிள் நிறுவனத்தின் நியூ ஐபேடின் விலை ரூ. 30,500 விலையிலிருந்து ஆரம்பிக்கின்றன. ஆப்பிள் நியூ ஐபேட், மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டேப்லட் போன்ற கம்ப்யூட்டர் டேப்லட்களுக்கு, கூகுளின் இந்த நெக்சஸ்-7 டேப்லட் சிறந்த போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.