தி டர்ட்டி பிக்சரில் ஏக கவர்ச்சி காட்டி நிறைய பேர் மனசை 'அழுக்காக்கிய' வித்யா பாலன் மீண்டும் ஒரு முறை அதைவிட கவர்ச்சியாக ஒரு படத்தில் தோன்றப் போகிறார். படத்தின் பெயர் 'கஞ்சக்கர்'. பேச்சு வழக்கு இந்தியில் இதற்கு 'லூசு' என்று அர்த்தம். இந்த லூசு படத்தில் சாதாரண மனைவி வேடத்தில் வரும் வித்யா, சில படுக்கையறைக் காட்சிகளில் படு செக்ஸியாக தோன்ற வேண்டியுள்ளதாம். இந்தக் காட்சிகளில் அவரது தோற்றம் பார்ப்பவர்களை
உசுப்பேற்றும் விதமாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் விரும்புகிறாராம்.
இதற்காக அவர் அமெரிக்காவுக்குப் போய் ஸ்பெஷல் ஸ்கின் ட்ரீட்மெண்ட் எடுக்கப் போகிறாராம். அதன்பிறகுதான் அந்தக் காட்சியில் நடிப்பாராம்! இதுகுறித்து இயக்குநர் ராஜ்குமார் குப்தா கூறுகையில், "ஆமாம்.. வித்யா பாலன் இதுவரை எந்த நடிகையும் செய்யாத அளவுக்கு கவர்ச்சியாகவும் துணிச்சலாகவும் தோன்றப் போகிறார். இதற்காகத்தான் அவரை அமெரிக்கா அல்லது பிரிட்டனுக்கு அனுப்பவிருக்கிறோம்," என்றார்.
அப்படியென்ன புரட்சி வேடம்...?!