கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் ஷூட்டிங் அனுஷ்காவால் தாமதாகியுள்ளது.சகுனிக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா. படத்தின் ஷூட்டிங் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே படத்தை அப்படியே தொங்கலில் விட்டுவிட்டு, ஆர்யாவுடன் தான் நடிக்கும் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஓடிவிட்டாராம் அனுஷ்கா. அவர் வருவார் என பல நாட்கள் கார்த்தி படக்குழுவினர் காத்திருந்து
ஏமாற்றமடைந்து, கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்கினாராம்.
இரண்டாம் உலகம் படம் முடியும் நிலையில் இருப்பதால், கடைசி காட்சிகளை முடிக்க கூடுதல் கால்ஷீட் வேண்டும் என்று இயக்குனர் செல்வராகவன் அனுஷ்காவை வற்புறுத்தியதால், கார்த்தி படத்துக்கு வராமல் நின்றுவிட்டாராம் அனுஷ்கா. இதனால் அலெக்ஸ்பாண்டியன் படத்துக்குழுவினர் அனுஷ்கா மேல் ஏக கடுப்பில் உள்ளார்களாம். எல்லாம் அந்த 'யோகா டீச்சரை' நேர்ல பார்க்கிற வரைக்கும்தானே!