போல் பச்சன் படம் ஹிட் ஆகியிருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகை அசின். வெற்றி படம் என்பது அசினுக்கு புதிதல்ல என்றாலும், போல்பச்சன் படம் அவருக்கு புது அந்தஸ்தை பெற்று கொடுத்துள்ளது. ரூ,100 கோடி வசூல் சாதனை படங்களில் நடிப்பதை இந்தி நடிகைகள் கவுரவமாக பார்க்கிறார்கள். இதில் கரீனா கபூர் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்த கோல்மால் 3, திரி இடியட்ஸ், பாடிகார்டு, ரா ஒன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கரீனா கபூருக்கு அடுத்த இடத்துக்கு அசின் உயர்ந்துள்ளார். அசின் ஏற்கனவே நடித்த கஜினி, ரெடி, ஹவுஸ்புல் படங்கள் ரூ.100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தன. தற்போது போல்பச்சன் படம் 100 கோடி வசூல் சாதனையை தாண்டி விட்டது. இதனால் கரீனாவுக்கு போட்டியாக அசின் உயர்ந்து விட்டார்.