ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்திருக்கும் இங்கிலீஷ் விங்கிலீஷ் இந்திப் படத்தில் அஜீத் நடிப்பதாக வந்த தகவல்களில் உண்மையில்லை என்றும், அந்த வேடத்தில் மாதவன்தான் நடிக்கிறார் என்றும் இன்று செய்தி வெளியாகியுள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம் இந்த இங்கிலீஷ் விங்கிலீஷ். இந்தப் படத்தில் தமிழ் நடிகை ப்ரியா ஆனந்தும் நடிக்கிறார்.
உடன் அடில் ஹூஸைன், மெஹ்தி நெபோ நடிக்கிறார்கள்.
பிரபல பாலிவுட் இயக்குநர் பால்கியின் மனைவி கவுரி ஷிண்டே இயக்கும் இந்தப் படத்தில், அஜீத் குமார் முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த வேடத்தில் நடிக்கவிருப்பது மாதவன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் படம் இன்னும் வெளிவராத நிலையில், கனடாவின் புகழ்பெற்ற டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.