ரவுடி ரத்தோரை ஹிட்டாக்கிய பிரபுதேவா தெலுங்கில் தான் இயக்கிய படமொன்றை இந்தியில் ரிமேக் செய்கிறார். இந்தப் படம் வேறு எதுவுமில்லை, தமிழில் சம்திங் சம்திங் என்ற பெயரில் ரிமேக் செய்யப்பட்டதே... அதே படம்தான். பிரபுதேவா இந்தியில் இயக்கிய இரு படங்களும் தெலுங்கு ரிமேக் படங்களே. முக்கியமாக இரு படங்களும் ஆக் ஷனில் பின்னியெடுத்தவை. ஆனால் இப்போது இயக்கப் போவது ஆக் ஷனுக்கு அவ்வளவு ஸ்கோப் இல்லாத சென்டிமெண்ட் படம். தென்னகத்து அண்ணன், தங்கை சென்டிமெண்ட்
இந்தியில் வொர்க் அவுட் ஆகுமா?
இந்தப் படத்தில் டிப்ஸ் கம்பெனி எம்டியின் மகன் க்ரிஷ் ஹீரோவாக நடிக்க ஸ்ருதி த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். ஏற்கனவே ஸ்ருதி இரண்டு இந்திப் படங்களில் நடித்துள்ளார். இரண்டுமே தோல்வி என்பது முக்கியமானது.