3. மனம் கொத்திப் பறவை
இன்னமும் இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸில் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றால் தமிழ்ப் படங்களின் ஐயோ பாவ நிலைமையை யோசித்துப் பாருங்கள். எந்தப் படமும் தேறவில்லை. குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்கள். சென்ற வார இறுதியில்
இப்படம் 85 ஆயிரங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் இதுவரையான சென்னை வசூல் 1.52 கோடி.
2. சகுனி
முதல் மூன்று நாளில் ஆர்வக்கோளாறு ரசிகர்களால் கிடைத்த இரண்டரைக் கோடிதான் சகுனியின் பேஸ். இரண்டாவது வார இறுதியில் ஐந்து கோடியைத் தாண்டிய இப்படம் இப்போது நொண்டியடிக்கிறது. இதன் சென்னை வசூல் 6.58 கோடிகள். சென்ற வார இறுதியில் இதன் வசூல் 53 லட்சங்கள்.
1. நான் ஈ
இந்தியாவே இப்போது இந்தப் படத்தைதான் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் டப் செய்தால் ஹாலிவுட்டை தூக்கலாம் என்கிறார்கள். ஒரு டப்பிங் தெலுங்குப் படம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் உட்காருவது எளிதல்ல. இந்த ஈ 83 லட்சங்கள் வசூலித்து முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. நிச்சயமாகச் சொல்ல முடியும் அடுத்த வார பாக்ஸ் ஆஃபிஸில் இது இதைவிட அதிக கெலக்சனை பெறும். ஈ-க்கு அமைந்த ரசிகர்கள் அப்படி.