பிரேசில் அழகி ப்ரூனா அப்துல்லாவுக்கு திருமணம்!


அஜீத்துடன் 'பில்லா-2' படத்தில் நடித்த பிரேசில் அழகி ப்ரூனா அப்துல்லாவுக்கு விரைவில் திருமணம் நடக்கிறது. பிரேசிலைச் சேர்ந்த விளம்பர மாடலான ப்ரூனா, பில்லா 2-ல் அஜீத் ஜோடியாக அறிமுகமானவர். படத்தின் பிரதான நாயகி பார்வதி ஓமணக் குட்டனை விட இவருக்கு ஏகப்பட்ட காட்சிகள். கிட்டத்த பாதி நிர்வாணத்தில்தான் படம் முழுக்க வந்திருப்பார். இவருக்கும் வங்காள இளைஞர் ஒருவருக்கும் காதல் என்று செய்தி பரவியது. 3 ஆண்டுகளாக அந்த இளைஞரை ப்ரூனா காதலிப்பதாகவும் தெரியவந்தது.
இந்த நிலையில் 'பில்லா-2' படத்தை முடித்து விட்டு குடும்பத்துடன் சொந்த நாட்டுக்கு திரும்பிய ப்ரூனா அப்துல்லாவுடன் காதலரும் சென்றுள்ளாராம்.
இதபற்றி கேட்ட போதெல்லாம் ப்ரூனா கருத்து கூற மறுத்து வந்தார். தற்போது தனது மவுனத்தை கலைத்து, எனக்கும் வங்காள இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட உள்ளது என்று தெளிவுபடுத்திவிட்டார்.
விரைவில் திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றனவாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget