ரெசிடென்ட் ஈவில் தொடரில் ரெட்ரிபியூஷன் என்ற இந்த பயங்கரத் திரைப்படம் 5வது படமாக வரும் செப்டம்பர் 28ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது. இந்தப் படத்தின் இயக்குனர் டபிள்யூ.எஸ்.ஆண்டர்சன். நடித்திருப்பவர்கள்: மில்லா ஜோனோவிச், மிச்செல் ரோட்ரிக். இது மிகவும் புகழ்பெற்ற வீடியோ கேம் தொடரின் திரைவடிவமாகும்.
இது உலகம் முழுதும் பிரசித்தி பெறும் வகையில் திரைப்படமாக வெற்றி கண்டு வருகிறது.
அம்ப்ரெல்லா கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் டி-வைரஸ் என்ற ஒன்றை பூமி முழுதும் பரப்பி விடுகிறது. இதனால் மனிதர்கள் உலகெங்கிலும் சதை தின்னும் மாமிச பட்சிணிகளாக மாறிவருகின்றனர்.
இதிலிருந்து மனித இனத்தைக் காப்பாற்ற உருவெடுப்பவள்தான் கதை நாயகி (அலைஸ்) மில்லா ஜோனோவிச். புதிய அறிமுக நண்பர்கள் மற்றும் பழைய நண்பர்கள் உதவியுடன் இந்த வைரஸ் பரவலுக்குக் காரணமானவர்களை எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்த திரில்லரின் கதைப் போக்கு.