தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வரும் தமிழ் நடிகை த்ரிஷா, அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ''த்ரிஷாவும், ராணாவும் காதலித்து வருவது உண்மைதான்'' என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் படமான 'லேசா லேசா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது முன்னணி கதாநாயகியாக இருக்கும் த்ரிஷா, பிரபல பட அதிபர் டி.ராமாநாயுடுவின் பேரன் ராணாவும்
தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது நட்பு ஏற்பட்டது.
அந்த நட்பு பின்னர் காதலாக மலர்ந்தது. நெருக்கமாக பழகி வரும் இருவரும், செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். நடிகர் ராணாவின் தங்கையின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் த்ரிஷாவும் பங்கேற்றார்.
வரும் டிசம்பர் மாதம் ராணா தங்கை திருமணம் முடிந்ததும், த்ரிஷாவை திருமணம் செய்து கொள்ள ராணா திட்டமிட்டு இருக்கிறார். இவர்களின் திருமணத்துக்கு இரண்டு பேர்களின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர். அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் இவருவரின் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது.
இது குறித்து த்ரிஷா தரப்பில் கூறியபோது, த்ரிஷாவும், ராணாவும் பழகுவது உண்மைதான். த்ரிஷா மனதுக்கு பிடித்தவருடன் பழகிப்பார்த்து, அவரை முழுமையாக புரிந்து கொண்ட பிறகே திருமணம் செய்து கொள்வார். அப்படித்தான் ராணாவுடன் பழகி வருகிறார். அவருடைய விருப்பத்துக்கு எதிராக நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம் என்றனர்.