திரையுலக வெற்றி ரகசியத்தை வெளியிட்ட அசின்!

பாலிவுட்டில் ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகை என்று  ஒதுக்கப்பட்டவர் அசின். ஆனால் இன்று அவர் நடித்த மூன்று படங்கள்  அடுத்தடுத்த ரூ 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதால், முன்னணி நடிகையாக வளம்வருகிறார். சமீபத்தில் அசின் நடிப்பில் வந்த போல்பச்சன் படமும் ரூ 100 கோடிக்கு மேல் வசூல் பார்த்துள்ளது. கரீனாகபூர் நடித்த ‘3 இடியட்ஸ், ‘கோல்மால் 3‘, ‘பாடிகார்ட், ‘ராஜன் படங்களும் ரூ.100 கோடி வசூலித்தன. கரீனா கபூருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில அசின் இருப்பதாக தற்போது பேசப்படுகிறது.
பாலிவுட் உள்ள முன்னணி ஹீரோக்கள் பார்வை  தன்னை நோக்கித் திரும்பியிருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் அசின். இது குறித்து பேசுகையில், இத்தனை நாள் எனது இடம் குறித்து எனக்கே திருப்தி இல்லை. ஆனால் இப்போது நம்பிக்கை பிறந்திருக்கிறது. எனக்கு எவ்வளவு படங்களில் நடிக்கிறேன் என்ற எண்ணிக்கை முக்கியமல்ல. திருப்தியாக வேலை பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம். இந்தி திரையுலகில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்தது சந்தோஷமாக இருக்கிறது.சினிமாவில் எனக்கு பாதுகாவலர்களோ, உறவினர்களோ ஆண் நண்பர்கள் யாரும் இல்லை..யாரோட தயவும் இல்லாம தனியொரு ஆளாக நின்று ஜெயித்திருக்கின்றேன். தென்னிந்திய நடிகைகளை பாலிவுட் ரசிகர்கள் இதுபோல் ஏற்றுக் கொள்வது அபூர்வம். என் விஷயத்தில் அந்த அபூர்வம் நிகழ்ந்திருப்பது கடவுள் ஆசீர்வாதம் தான்  என்றார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget