தயாரிப்பாளரை தலை தெறிக்க ஓட வைத்த டயானா பென்டி


ஐந்தரை அடி உயரம், வலை வீசும் கண்கள் என, பாலிவுட் ரசிகர்களை, விரட்டி, விரட்டி வேட்டையாடும், அழகிய ஆபத்து, டயானா பென்டி. நடித்ததோ, "காக்டெயில்என்ற ஒரே ஒரு படத்தில். ஆனால், அம்மணியின் ஆசைக்கு, அளவே இல்லை. பெரிய அளவில், படங்கள் எதுவும், கைகளில் இல்லாத நிலையில், பிரபல ஷாம்பூ  தயாரிப்பு நிறுவனம், இவரை, தன் விளம்பர படத்தில் நடிக்க அழைத்தது. தயாரிப்பாளர்களை வீட்டுக்கு அழைத்த டயானா, அவர்களிடம், மிகவும் சாதாரணமாக, "இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால், உடனே கால்ஷீட்என, ஷாக் கொடுத்தார்.
அதிர்ந்துபோன  தயாரிப்பாளர்கள்,"இரண்டு சீனில், நீங்கள் தலையை காட்டினால் போதும் மேடம்என கூற, "இரண்டு சீனுக்கு தான், இரண்டு கோடி ரூபாய். அதற்கு மேல் நடித்தால், ரேட்டு, இன்னும் உயரும்என, மறுபடியும் மின்சாரம் பாய்ச்சினார். அரண்டு போன தயாரிப்பாளர்கள், கதறியபடியே, அவரது வீட்டிலிருந்து, தலைதெறிக்க ஓடி வந்து விட்டனர்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget