தமிழ் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகைகள் பட்டியலில், இடம் பெற்றுள்ளவர்களுக்கு, சவாலாய் சமீபத்தில் இடம் பிடித்தவர், ஹன்சிகா மோத்வானி. "மொளு...மொளுன்னு... காஷ்மீர் ஆப்பிளாய், பார்ப்போரை, உறைய வைத்த, ஹன்சிகாவின் பின்னணி, எத்தனை பேருக்குத் தெரியும்? கர்நாடாக மங்களூரில் பிறந்தார். அப்பா பிசினஸ் மேன், அம்மா டாக்டர். 2003ல் குழந்தை நட்சத்திரமாக, ஹிந்தி சீரியலில், அறிமுகம் ஆனார். 2004 வரை, ஏழு ஹிந்தி சீரியலில் நடித்தார். அதே காலகட்டத்தில், ஆறு ஹிந்தி படங்களிலும், குழந்தை நட்சத்திரமாய் ஜொலித்தார்.
2007ல் "தேச முதுரு என்ற, தெலுங்கு படத்தில், அல்லி அர்ஜூனா உடன் நாயகியாக அறிமுகமானார். முதல் படமே, பெயர் சொல்லும் படி அமைந்தது. சிறந்த அறிமுக நாயகிக்கான, "பிலிம் பேர் விருதையும் பெற்றுத்தந்தது. "2008ல் கந்திரி, 2009ல் மங்கா, 2009ல் பில்லா, என, தெலுங்கில், "பிஸி ஆனார், ஹன்சி.
தெலுங்கில் உச்சத்தில் இருந்தவரை, சிகரத்தில் கொண்டு செல்ல முடிவு செய்தது, தமிழ் சினிமா. தனுஷ் படத்தில் கிடைத்த வாய்ப்பு, அதன் பின், ஜெயம் ரவி உடன், எங்கேயும் காதல், விஜய் உடன் வேலாயுதம், சமீபத்தில் வெளியாகி, வெள்ளி விழா கொண்டாடிய, "ஒரு கல், ஒரு கண்ணாடி, என, தமிழில் தனக்கென, தனிஇடம் பிடித்தார், ஹன்சிகா. ஆர்யாவுடன் சேட்டை, சிம்பு உடன் வாலு, வேட்டை மன்னன் படங்களில் "பிஸி ஆக இருக்கும் ஹன்சிகா, "சேட்டையிலிருந்து விலகியதாக.. சமீபத்தில் தகவல் பரவியது.
இது குறித்து ரசிகர்கள், "டுவிட்டரில் கேட்ட கேள்விகளுக்கு, கூலாய் பதிலளித்திருக்கிறார், ஹன்சிகா. ""தேதி காரணமாக, நான் விலகியது சேட்டை அல்ல, வேட்டை(ரீமேக்)... என, தெளிவாக கூறிவிட்டது, மங்களூர் மாம்பழம். காத்திருங்கள், விரைவில் காத்திருக்கு, பெரிய விருந்து!