யார் சொன்னா எனக்கு என்ன - ஜனனி மாமி!


யார் என்ன சொன்னாலும் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் அய்யரை நீக்கப்போவதில்லை என்று நடிகை ஜனனி தெரிவித்துள்ளார். நடிகைகள் பலர் தங்கள் பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை வைத்துள்ளது பற்றி விமர்சனம் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஜனனி அய்யர் பெயர் இந்த விவகாரத்தில் பெரிதும் அடிபடுகிறது. ஜனனி அய்யர் நடித்து அண்மையில் ரிலீஸான பாகன் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கரு பழனியப்பன், நடிகையின் இந்த சாதி அடையாள மோகத்தைக் கண்டித்தார்.
"இந்தப் படத்தின் நாயகி தன் பெயரை ஜனனி அய்யர் என்று வைத்திருக்கிறார். அதென்ன அய்யர்? இப்படி தன் பெயரோடு சாதி அடையாளத்தை வைத்திருப்பதை நான் ஆட்சேபிக்கிறேன்," என்றார்.
இந்த விமர்சனங்கள் எல்லாம் ஜனனிக்கு தெரியாமலா இருக்கும். அதற்கு அவர் கூறுகையில், யார் என்ன விமர்சனம் செய்தாலும் சரி என் பெயருக்கு பின்னால் இருக்கும் அய்யரை நீக்க மாட்டேன் என்று தில்லாகக் கூறியுள்ளார்.
இதற்கு யார், யார் என்ன சொல்லப் போகிறார்களோ தெரியவில்லையே...

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget