அஜீத் குமாரின் 53வது படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். அஜீத் குமார் தற்போது விஷ்ணுவர்த்தனின் பெயரிடப்படாத படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோருடன் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஜிம்முக்கு சென்று கடும் உடற்பயிற்சி செய்து உடலை கும்மென்று ஆக்கியுள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் அஜீத்தின் 53வது படமாகும்.
விஜய வாஹினி தயாரிக்கும் இப்படத்தின் திரைக்கதை எழுதும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அஜீத் குமார் தனது சொந்த பட நிறுவனத்தை துவங்கப் போகிறார் என்று கோடம்பாக்கத்தில் பேச்சாகக் கிடக்கிறது. உண்மை என்ன என்பது அஜீத் சொன்னால் மட்டுமே தெரியும்.