மன்மத ராஜ்ஜியம் என்றொரு படத்தை இயக்கிய மங்கை அரிராஜன் அப்படத்தை பின்னர் கிடப்பில் போட்டு விட்டார். அதை இப்போது தூசு தட்டி இளமை ஊஞ்சல் என்ற பெயரில் படமாக்கி வருகிறார். முன்பு நடித்த சில நடிகைகளை அப்புறப்படுத்தி விட்டு நமீதா,கிரண், மேக்னா நாயுடு, கீர்த்திசாவ்லா, ஆர்த்தி, ஷிவானி உள்பட 6 நடிகைகள் நடித்துள்ளனர். இவர்களில் நமீதாவுக்கு மட்டுமே கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் இயக்குனர் அரிராஜன்.
அதனால் இந்த படத்தை அதிகமாகவே எதிர்பார்க்கிறார் நமீதா. தேவையான இடங்களில் கிளாமரை வெளிப்படுத்தி இளவட்ட ரசிகர்களை மீண்டும் தன்பால் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இப்படி ஆறு நடிகைகள் படத்தில் இருக்க, நமீதாவுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதால் மற்ற 5 நடிகைகளும் அதிருப்தியுடன நடித்து வருகிறார்களாம்.