சந்தானத்தின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு - தெரியுமா?

சந்தானத்தின் காட்டில் அதிர்ஷ்ட மழை பொழிவதால் 1 நாள் 2 நாள் கால்சீட் என்றால் நோ சொல்லி விடுகிறாராம். 10 நாள் 20 நாள் என்றால் மட்டுமே கால்சீட் தருகிறாராம். இதற்கு காரணம் லம்பாக பணம் கிடைக்கும் என்பதுதான் என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தில் காமெடி நடிகர்களைப் பொறுத்தவரை நாள் கணக்கில் தான் சம்பளம் கொடுப்பார்கள். சந்தானத்துக்கும் அப்படி தான். அவரது ஒரு நாள் சம்பளம் 10 இலட்சம்.
ஒரு படத்திற்கு தொடர்ந்து 10 நாள் நடித்துக் கொடுத்தால் அவருக்கு கிடைப்பது 1 கோடி. இது தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளின் சம்பளத்தை விட அதிகம். இதனால் சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகளை 2 அல்லது 3 நாட்களில் முடிக்கவே இயக்குனர்கள் முயற்சி செய்கின்றனர். தற்போது சந்தானம் போட்டிருக்கும் இந்த புதிய நிபந்தனையினால், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரும் கலங்கிப் போய் இருக்கின்றனர். 20 நாள் என்றால் சந்தானத்தின் சம்பளம் 2 கோடியா என்று அனைவரும் வாயைப் பிளந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பதால், மீண்டும் அவரிடமே செல்கின்றனர்.
சந்தானத்தை ஒதுக்கியவர்கள் எல்லாம், இன்று அவரது கால்ஷீட்டுக்காக தவம் இருக்கின்றனர். இந்த வரிசையில் சில முன்னணி இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்பதால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் சந்தானம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget