கவர்ச்சி காட்டவே பயப்படாதவர் வித்யா பாலன். அதேபோல எப்பவும் தைரியமாகவும், தில்லாகவும் இருப்பவர். ஆனால் அப்படியாப்பட்ட அவருக்கு ஒரே ஒரு 'மேட்டர்' மட்டும் பிடிக்கவே பிடிக்காதாம்.. அந்தப் பெயரைக் கேட்டாலே பயந்து போய் விடுவாராம்.. அவர்தான் பூனையார். பூனைகள் என்றால் வித்யாவுக்கு செம அலர்ஜியாம். பூனை என்ற பெயரைக் கேட்டாலே அவருக்கு டென்ஷனாகி விடுமாம். அதேபோல எங்காவது பூனையைப் பார்த்து விட்டால் போதும், ஓடி ஒளிந்து விடுவாராம்.
பூனையைப் பற்றியாராவது பேசினால் கூட ஸ்டாப் ஸ்டாப் என்று கத்தி விடுவாராம்.
ஒருமுறை இப்படித்தான், கமலிஸ்தான் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்புக்காக வந்திருந்தார் வித்யா. அப்போது கேரவன் வேனுக்குள் சாப்பாட்டுக்காக போயிருந்த வித்யா சாப்பாட்டை முடித்து விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது அங்கு சில பூனைகள் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து போய் அங்கிருந்த சேர் ஒன்றில் ஏறி நின்று விட்டாராம். பூனைகளை இங்கிருந்து விரட்டினால்தான் நான் இறங்குவேன் என்று பீதியுடன் அவர் கூறவே வேறு வழியில்லாமல், சிலர் சேர்ந்து பூனைகளைப் பிடித்து வேறு பக்கம் கொண்டு போய் விட்டனராம். அதன் பிறகுதான் சேரை விட்டு இறங்கினாராம் வித்யா. இருப்பினும் டென்ஷனில் வியர்த்துக் கொட்டியதால் மறுபடியும் கேரவனுக்குள் ஓடிப் போய் விட்டாராம்.
ஏன் இப்படி பூனையைக் கண்டால் எலி போல ஓடுகிறார் வித்யா... யாராச்சும் பிஎச்டி பண்ணி கண்டுபிடிங்கப்பா....!