திரையுலகில் தக்காளியின் தேவை எதற்கு?

அந்தக் காலத்தில் ஹீரோவும், ஹீரோயினும் காதல் டூயட் பாடும்போது படு சுவாரஸ்யமாக காட்சி வைப்பார்கள். அதாவது ஹீரோ, பஸ் கண்ணாடி போல ஒரு பெரிய கண்ணாடியை முகத்தில் தொங்க விட்டபடி, வரையப்பட்ட மீசையுடன், தனது 'முரட்டு' முகத்தை ஹீரோயினின் அழகான முகத்திற்கு அருகில் கொண்டு வருவார். கார்டன் போன்று போடப்பட்ட செட்டில்தான் இந்த காட்சியைப் படமாக்குவார்கள். அந்த செட்டில் வைக்கப்பட்டுள்ள பூச்செடிகளுக்கு அருகில் நின்றபடிதான் இந்த சீனைப் படமாக்குவார்கள்.
அப்போது ஹீரோ, ஹீரோயின் முகங்கள் நெருங்கும்போது இரண்டு பெரிய பூக்களைக் கொண்டு அவர்களது முகத்தை மறைப்பது போல செய்து பூவை 'கிளுகிளு'வென்று செட் அசிஸ்டெண்டுகள் ஆட்டுவார்கள்... இல்லையானால் ஹீரோ, ஹீரோயினே சுயமாகவும் ஆட்டிக் கொள்வார்கள்.!
இப்படி பூவை ஆட்டினால், ஹீரோவும், ஹீரோயினும் முத்தமிட்டுக் கொண்டார்கள் என்று அர்த்தமாம்....! இதே பாணியில் ஒரு நூதனமான காதல் சீனை லேட்டஸ்டாக பாலிவுட்டில் சுட்டுள்ளனர். ஆனால் இங்கு பூவுக்குப் பதில் தக்காளியை வைத்து காட்சியை கன கச்சிதமாக முடித்துள்ளனர்.
ரிச்சா சத்தா, நிகில் திவிவேதி நடித்து வரும் புதிய படத்தில்தான் இந்தக் காட்சி வருகிறது. மிகவும் நெருக்கமான காதல் காட்சி அது. ஹீரோயின், ஹீரோவுக்கு மிக நெருக்கமாக நின்று முத்தமிடுவது போன்ற காட்சி. ஆனால் ஹீரோயின் ரிச்சாவுக்கு வெட்கமாக இருந்ததாம். இதனால் தயங்கித் தயங்கி அவர் நடித்துள்ளார். இதனால் டைரக்டருக்கு அதிருப்தி ஏற்பட்டது.
என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்த அவருக்கு அந்தக் காலத்தில் செய்வதைப் போல செய்தால் என்ன என்று யோசனை தோன்றியது. அதேசமயம், அந்தக் காலத்தில் உள்ளதைப் போல பூக்களை வைத்து ஆட்டாமல், வேறு விதமாக எடுக்க எண்ணிய அவர் கொஞ்சம் தக்காளியை வாங்கி வரச் சொன்னார். வந்தது தக்காளியும். பின்னர் அந்த தக்காளிகளுக்கு மத்தியில், ஹீரோவையும், ஹீரோயினையும் நெருக்கமாக வருவது போல செய்து, தக்காளியைக் கொண்டு அதை மறைத்து ஷூட் செய்தார் காட்சியை...
இந்த சீனுக்காக ஒரு மூ்டை தக்காளியை வாங்கி வந்தார்களாம் அசிஸ்டென்ட்டுகள்.
பெங்களூர் தக்காளியா இல்லை நாட்டுத் தக்காளியா ஜீ...??
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget