இன்றைய மென்பொருள் உற்பத்தியில் இலவச மென்பொருள்கள் மிகுந்த தரத்துடன் உருவாக்கபடுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் அதன் கணினி பாதுகாப்பிற்காக பெரும் தொகையை செலவிட்டு வருகின்றது. தனி நபர் கணினி பாதுகாப்பிற்காக சில நிறுவனங்கள் இலவசமாகவே சிறந்த மென்பொருட்களை வழங்குகின்றன. இணையதள தகுதி சான்றளிப்பு நிருவனமான கோமாடோ நிறுவனம், இணைய பாதுகாப்பிற்காக தீச்சுவர் மென்பொருள்களை
வடிவமைத்து வழங்கிவருகிறது. அண்மை சில காலமாக, பயனாளர்களுக்கு அதிக பயன் தரும் வகையில் கோமாடோ தீச்சுவர் மென்பொருளுடன் பாதுகாப்பு மற்றும் நச்சு திரள் நீக்கி மென்பொருள்களை ஒன்றாக இணைத்து வழங்கிவருகிறது.
கொமாடோ தீச்சுவர் மென்பொருள் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு செயல்பாடுகள் வேகபடுத்தபட்டுள்ளது. இந்த மென்பொருளினை நிறுவது மிகவும் எளிமையாக உள்ளது. விண்டோஸ் விஸ்டாவிலும் கூட இதன் இயங்கம் சிறப்பாக உள்ளது. இதில் உள்ள விருப்பத்தேர்வுகள் அனைத்தும் பயனாளர்கள் எளிதில் தனிபயனுள்ள தேர்வுகளை செய்துகொள்ளும் வகையில் உள்ளது.
இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7 (32-Bit/64-Bit)
Size:64.90MB |