மாற்றான் வெளியானதும் தாண்டவத்தின் வசூல் தடுமாறிவிட்டது. பல இடங்களில் படத்தை தூக்கிவிட்டனர். வெளிநாட்டில் இரண்டாவது வார இறுதிவரை வசூல் எப்படி, பார்ப்போம். யுகே-யில் இரண்டாவது வார இறுதியில் 9,633 பவுண்ட்களை இப்படம் வசூலித்துள்ளது. மொத்தம் 69,078 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 57.58 லட்சங்கள். யுஎஸ்ஏ-வில் இரண்டாவது வார இறுதியில் 21 திரையிடல்களில் 37,953 அமெரிக்கன் டாலர்கள். இதுவரை 1,83,661 அமெரிக்கன் டாலர்கள்.
நமது ரூபாய் மதிப்பில் 96.69 லட்சங்கள். ஈகா, ஜுலாயி போன்ற தெலுங்குப் படங்கள் இங்கு ஐந்து கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்ட்ரேலியாவில் இரண்டு வாரங்கள் முடிவில் 27.44 லட்சங்களை வசூலித்துள்ளது.
படம் இன்னும் சற்று பார்க்கிற மாதிரி இருந்திருந்தால் வசூலும் அதிகமிருந்திருக்கும். விக்ரம்... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.