அரசியலில் முழுநேரமாக இறங்கிவிட்டதால் சினிமாவில் நடிக்க நேரமில்லையாம் குஷ்புவிற்கு. இப்பொழுதும் நல்ல கதாபாத்திரத்திடன் தமிழ் இயக்குநர்கள் சென்றாலும் நோ சொல்லி அனுப்பிவிடுகிறார். கிட்டத்தட்ட சினிமாவில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார் என்றே கூறலாம். ஆனால் சின்னத்திரையில் நடிப்பதை மட்டும் நிறுத்தமாட்டாராம் குஷ்பு காரணம் கேட்டால், 'அது வீட்டுக்கு வீடு போய் பொம்பளைங்களை டச் பண்ணுற ஏரியா. அதனால் அதை விடுற ஐடியா இல்லை'
என்று தீர்மானமாக கூறியுள்ளார்.
'சின்னத்திரையின் அன்னை தெரசா' என்று ஊரே கும்பிடுகிற மாதிரியான கதாபாத்திரங்களை தேடிக் கொண்டிருக்கிறாராம். சினிமாவில் நடித்தால் பலவிதமான கேரக்டர்களை செய்ய வேண்டிய நிலைவரும், அப்பொழுது தனது அரசியல் இமேஜ் பாதிக்கும் என அவர் நினைப்பதால், சினிமாவுக்கு முழுக்கு போட இருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் சின்னத்திரையில் பெண்களை கவரும் பாத்திரங்களில் நடித்து இல்லத்தரசிகளின் நெஞ்சில் இடம்பிடிக்கலாம் என்பதுதான் குஷ்புவின் இந்த ஐடியா என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். ஆனால் அமிதாப்பச்சனுடன் மேட் டாட் படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாலேயே தமிழ்பட வாய்ப்புகளை மறுப்பதாகவும் கோலிவுட்டில் பேச்சு உலா வருகிறது. உண்மை எதுவோ குஷ்புதான் கூறவேண்டும்.