மலையாளப் படங்களில் பின்னணி பாடுவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார் காவ்யா மாதவன். மலையாளத்தில் பிரபலமான நடிகையாகத் திகழ்ந்தவர் காவ்யா மாதவன். தமிழில் காசி, என் மன வானில், சாது மிரண்டால் என சில படங்களில் நடித்துள்ளார். 2009-ல் அவருக்கு திருமணம் நடந்தது. இரண்டு வருடங்கள் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தவர், பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து விட்டார்.
விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார்.
மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். மலையாளப் படம் ஒன்றில் பின்னணி பாடகியாகவும் காவ்யா மாதவன் அறிமுகமாகிறார். இந்தப் பாடலுக்கு பலரும் பாராட்டு தெரிவிப்பதால், தொடர்ந்து படங்களில் பாட முடிவு செய்துள்ளார்.