தருதல’ன்னு அப்பா அடிக்கடி கோபப்படுற பிள்ளைதான் ஹீரோ.. கேபிள் கனெக்க்ஷன் வேலை பார்க்கிறார். ஹீரோயின் மீது காதல் வருகிறது. ஆனா, ஹீரோயினுக்கும் அவர் மீது வரணுமே… அதுதான் இல்ல… ஒரு கட்டத்தில் ஹீரோயின் மீது பைக்கால் மோதி விடுகிறார் ஹீரோ. அப்புறம் ஒரு வழியாக அவர் மீது காதல் வருகிறது. ஆனால், ஹீரோ மெல்ல எஸ்ஸாகிப் போகிறார். எப்போதும் கரிச்சுக் கொட்டிக் கொண்டிருக்கும் அப்பாவிடம் எப்படியாவது நல்லபிள்ளை என பெயர் வாங்கிவிட வேண்டும் என்று இவர் எடுக்கிற அத்தனை
முயற்சிகளும் வீணாகப் போக, கடைசியில் இவரது தங்கையை ஒரு கோஷ்டி கடத்திவிடுகிறது. அவர்களிடம் இருந்து அவளை மீட்டாரா? அப்பாவிடம் நல்ல பேரு வாங்கினாரா என்பதை கொஞ்சம் ஷாக் கொடுக்கிற க்ளைமேக்சுடன் சொல்லி முடிக்கிறார்கள்.
ஏரியா கவுன்சிலரிடம் ஹீரோ மோதும் காட்சியில் அடுத்து என்னென்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பு நமக்குள் உருவாக்கும் இயக்குநர் அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்பார்ப்புகளை நீர்த்துப் போகச் செய்கிறார். படத்தில் பெரிதும் ஆறுதலாக இருப்பது ஹீரோவின் பாட்டிதான். அடிக்கடி அலப்பறை கொடுக்கும் இந்த பாட்டி கொஞ்சம் சிரிக்க வைத்து காமெடி ட்ராக் இல்லாததை சரி செய்திருக்கிறார்.
ஹீரோவின் தங்கையை கடத்தும் காட்சிகள் கொஞ்சம் எக்ஸ்ட்னரியாக இருக்கின்றன. பெண்ணைக் கடத்தியவர்கள் அப்படி என்ன மாட்டுத் தொட்டியிலா கட்டிப் போட்டு வைத்திருப்பார்கள்? அந்த இடத்தில் நடைபெறும் சண்டைக்காட்சி அமர்க்களம்.
ஹீரோவுக்கு இது முதல் படம். முதல் படத்திலேயே ஆக்க்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார்.
அரசு, கம்பீரம், சபரி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ரமேஷ் இயக்கியிருக்கும் படம். புதுமுகங்களுடன் களம் இறங்கியிருக்கிறார். கொஞசம் அழுத்தம் கொடுக்கிற க்ளைமேக்ஸ். படத்தின் காட்சிகள் இன்னும் அழுத்தமாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.