பிடதி ஆசிரம பிரபலம் நித்தியானந்தா சாமியாரும், ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருந்த சிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த சிடியும் அதன் காட்சிகளும் உலக பிரசித்தம். இப்போது அந்த சிடியில் உள்ள காட்சிகளை அப்படியே சினிமாவில் காட்சியாக்கி இருக்கிறார்கள். அந்த படத்தின் பெயர் வெண்ணிலாவின் அரங்கேற்றம்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் விபச்சாரியாக மாறிய வெண்ணிலா என்ற பெண் தன் அனுபவங்களை சொல்வது மாதிரியான கதை. அதன் ஒரு பகுதி ஒரு போலிசாமியாரிடம் அவர் ஏமாந்ததாக வருகிறது. அதைத்தான் நித்யானந்தாவோடு இணைத்து எடுத்திருக்கிறார்கள். படத்தில் வரும் சாமியாரின் பெயர் சர்வானந்தா. மூர்த்தி என்ற திருநங்கை சர்வானந்தாவாவக நடித்திருக்கிறார். சமஸ்தி என்பவர் வெண்ணிலாவாக நடித்திருக்கிறார். இதுபற்றி படத்தின் இயக்குனர் ஆர்.முத்துக்குமார் கூறும்போது "பிரபலமான நிகழ்வுகளை சினிமாவில் காட்சியாக வைப்பது ஒன்றும் புதிதில்லை. அதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம். கதை முழுக்க முழுக்க கற்பனை. அது யாரையும் குறிப்பிடுவதில்லை. விலைமாதுகள் யாரும் விரும்பி அந்த தொழிலுக்கு வருவதில்லை. அதில் அவர்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதை சொல்லும் படம் ஹீரோவாக தினேஷ் என்ற புதுமுகம் நடிக்கிறார். சமஸ்தி, மிதுனுவாலியா என்ற பெண்கள் துணிச்சலாக நடித்துள்ளனர். என்றார்.