தமிழில் உருவாகும் முதல் டிராகுலா, "3டி படம் "நான்காம் பிறை பிரபு, நாசர், திலகன், மனோபாலா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தை, பிரபல மலையாள பட இயக்குனர் வினயன் இயக்குகிறார். ஒவ்வொரு பிரேமிலும், "3டி எபெக்ட் கொடுத்து படமாக்கியுள்ள, இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு, ருமேனியா நாட்டில் நடந்துள்ளது. இந்திய மற்றும் ஹாலிவுட் தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கு பெற்றுள்ள, இப்படத்தின் ஹைலைட்டாக ஒரு கவர்ச்சி பாடலும் இடம் பெற்றுள்ளது. இந்தி, தெலுங்கு, பட உலகில் தன் கவர்ச்சியால்
ராஜாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் ஷனா ஓபராய், அப்பாடலில் கலக்கலான நடனம் ஆடி தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.