எடையை குறைத்து அழகை கூட்டும் நமீதா!

மச்சான்ஸ் என்று, தமிழக ரசிக கோடிகளை, ஆசை ஆசையாக அழைக்கும் நமீதாவுக்கு, தற்போது, "இளமை ஊஞ்சல் என்ற படம் மட்டுமே கைவசம் உள்ளது. மேற்கொண்டு படங்களை கைப்பற்ற எடுத்த முயற்சிகள், பலன் அளிக்காததால், அடுத்து என்ன செய்து, சினிமாவில் நீடிப்பது? என்று  தீவிரமாக  யோசித்துக் கொண்டிருந்தார் நமீதா. அந்த சமயம் பார்த்து தான், ஜப்பான் தொலைக்காட்சி, அவரை,
 இந்திய அழகியாக தேர்வு செய்தது. இதனால், சந்தோஷத்தில் திக்கு முக்காடிப்போன நமீதாவுக்கு, கலைத் துறையில் இன்னும் நாம் சாதிக்கலாம் என்ற, புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.  அதனால், தற்போது, தன் உடல் எடையை குறைக்கும்   முயற்சியில் ஈடுபட்டுள்ள நமீதா, ஒரு பயிற்சியாளரை நியமித்து, அவரது ஆலோசனையின்படி, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளை கடைபிடித்து வருகிறார். 

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget