நடிகை நமீதாவுக்கு, ‘6 அடி உயர மோகினி’ என்று சினிமா படவிழாவில், புதிய பட்டம் சூட்டப்பட்டது.
சினிமா பட விழா
பாரதி, ஆட்டோகிராப், மொழி, சிவகாசி, ஆனந்தபுரத்து வீடு ஆகிய படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர், ஈ.வி.கணேஷ்பாபு. இவர், ‘யமுனா’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா,
சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளர் எஸ்.தாணு பெற்றுக்கொண்டார்.
நமீதாவுக்கு பட்டம்
விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகை நமீதா கலந்து கொண்டார். அவருக்கு, ‘6 அடி உயர மோகினி’ என்று டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ராகவ் மகேஷ், புதிய பட்டம் சூட்டினார். ‘‘அழகான பெண்களை பார்த்தால், யாரடீ நீ மோகினி என்று கேட்க தோன்றும். அந்த வகையில் நமீதாவைப் பார்த்தால், ‘6 அடி உயர மோகினி’ என்று சொல்ல தோன்றும்’’ என்று அவர் கூறினார்.
கவிஞர் வைரமுத்து
விழாவில், கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசும்போது, ‘‘பாடல்கள் வெளியீட்டு விழாவில், மூத்த கலைஞர்களின் உருவ படங்களை வைத்து, அவர்களை கவுரவிக்கலாம்’’ என்று யோசனை கூறினார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் டி.சிவா, செயலாளர்கள் பி.எல்.தேனப்பன், கே.முரளிதரன், பொருளாளர் எஸ்.தாணு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், பட அதிபர்கள் கே.ஈ.ஞானவேல்ராஜா, அமிர்த கவுரி, டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், சீனுராமசாமி, அஸ்லாம், ஹோசிமின், நாகா, அன்பழகன், நடிகர்கள் பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், பாலாசிங், இசையமைப்பாளர் இலக்கியன், படத்தின் கதாநாயகன் சத்யா, கதாநாயகி ஸ்ரீரம்யா ஆகியோரும் பேசினார்கள். பட அதிபர்கள் எஸ்.ஜெய்கார்த்திக், விருதை எம்.பாண்டி, ஏ.குமார், சி.குணசேகரன் ஆகியோர் வரவேற்றார்கள். டைரக்டர் ஈ.வி.கணேஷ்பாபு நன்றி கூறினார்.