ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தில், சீதை வேடத்தில், பவ்யமாக நடித்த நயன்தாரா, தற்போது ராணாவுடன் நடித்துள்ள, "கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் என்ற படத்தில், கிளாமராக நடித்துள்ளார். இப்படம், "ஓங்காரம் என்ற பெயர் மாற்றத்துடன் தமிழுக்கும் வர உள்ளது. இதுபற்றி நயன்தாரா கூறும் போது, "ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடம் என்பதால், அந்த கேரக்டருக்கு ஏற்ப, மாறி நடித்தேன். ஆனால், சாதாரண மாடர்ன் கேரக்டர்கள்
என்கிற போதும், முழுசாக போர்த்திக் கொண்டு நடித்தால், ரசிகர்களிடம் எடுபடாது. அதனால் தான் ராணாவுடன் நடித்த படத்தில் கதைக்கும், காட்சிக்கும் அவசியப்பட்ட இடங்களில் சற்று கிளாமராக நடித்தேன். மற்றபடி, ஓவராக கிளாமர் காண்பிக்கவில்லை. தமிழிலும், அஜீத்துடன் நடிக்கும் படம், ஆர்யாவுடன் நடிக்கும், "ராஜாராணி படம் ஆகியவற்றில், ரசிக்கத் தூண்டும் வகையில், கிளாமராக நடித்து வருகிறேன் என்கிறார்.