நடிப்புக்கு பேர்போன நடிகை என்று பெயரெடுக்கவில்லை என்றபோதும், கவர்ச்சிக்கு பேர்போன நடிகையாக சினிமாவில் பெயரெடுத்திருக்கிறார் லட்சுமிராய். அதனால் அந்த பெயரையாவது தொடர்ந்து தக்கவைத்தபடி சினிமாவில் நிலைத்திருக்க வேண்டும் என்ற நினைப்பவர், டைரக்டர்கள் கிளாமர் காட்சிகளே இல்லை என்றபோதும், கண்டிப்பாக பாடல் காட்சிகளிலாவது என்னை கிளாமராக இறக்கி விடுங்கள் என்று அடம் பிடிக்கிறார்.
தற்போது தான் இரண்டு வேடங்களில் நடித்து வரும் ஒன்பதுல குரு படம் குடும்பப்பாங்கான கதை என்றபோதும், ஒரு கெட்டப் ஹோம்லி என்றாலும், இன்னொரு கெட்டப்பில் என்னை கிளாமராக காண்பியுங்கள் என்று அப்படத்தின் இயக்குனரான பி.டி.செல்வகுமாரை கேட்டுக்கொண்டாராம் லட்சுமிராய். இதனால் முதலில் அதை யோசிக்காத இயக்குனர், கிளாமரும் படத்தின் வியாபாரத்துக்கு ஒரு ப்ளசாகத்தானே இருக்கும் என்று இப்போது லட்சுமிராயை நீச்சல் உடையில் இறக்கி விட்டிருக்கிறார். தனக்குப்பிடித்தமான கிளாமர் வேடமும் கிடைத்ததையொட்டி, பாடல் காட்சிகளில் தண்ணீரில் நீந்தியபடி படுகவர்ச்சியான் குளியல் காட்சியிலும் நடித்திருக்கிறாராம் லட்சுமிராய். அந்த காட்சிகள் படம் பார்க்கும் இளவட்ட ரசிகர்களை சூடேத்தும் வகையில் அமைந்திருக்கிறதாம்.