உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்ட கையோடு, வெள்ளித் திரைக்கு அடி எடுத்து வைத்தார், பார்வதி ஓமனக் குட்டன். இந்தியில் ஓரிரு படங்களில் நடித்தார். ஆனாலும், பாலிவுட்காரர்கள், பார்வதியை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, அஜீத்துடன் "பில்லா-2 படத்தில், ஹீரோயினாக நடித்தார். "பில்லாவுக்கு பின், தமிழில் முன்னணி நடிகையாகி விடலாம் என, பார்வதி நினைத்தபோதும், அவரது ஆசை நிறைவேறவில்லை. கோலிவுட்டும் அவரை கைவிட்டு விட்டதால், கையை பிசைந்து கொண்டிருந்த
பார்வதிக்கு, தற்போது, அவரது தாய்மொழியான மலையாள திரையுலகம் தஞ்சம் அளித்துள்ளது. மலையாள திரைப்படங்களில், வில்லனாக நடித்து பிரபலமான, பைஜு மேனன் இயக்கும் படத்தில், ஹீரோயினாக நடிக்கிறார், பார்வதி. இந்த படத்துக்கு, "கே.க்யூ என, வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளனர். பார்வதிக்கு, தாய்மொழியில் வரவேற்பு கிடைக்குமா என்பது, "கே.க்யூ வெளிவந்தால் தான் தெரியும்.