ஆடவர்களுடன் லட்சுமி ராயின் அனுபவங்கள்


இதுவரை தான் சந்தித்த ஆண்களில் பெரும்பாலும் நல்லவர்களே அதிகம். சிலர்தான் ஏமாற்றுக்காரர்களாக இருக்கிறார்கள், என லட்சுமி ராய் கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் நிருபர்களிடம் பேசிய லட்சுமி ராய், "தென் மாநிலங்களில் ரசிகர் மன்றங்கள் வைக்கும் அளவுக்கு நானும் ஒரு பிரபல நடிகையாக இருப்பதில் சந்தோஷமாக உள்ளது. முதலில் சினிமாவில் நிரந்தரமாக ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே இப்போதைய என் ஆசை. அரசியலுக்கு வருவீர்களா என்கிறார்கள். முதலில் சினிமா... அதன்பிறகு மற்றதையெல்லாம் பார்க்கலாம்.
நான் இதுவரை சந்தித்த ஆண்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால், நான் சந்தித்த ஆண்கள் பெரும்பாலும் ரொம்ப நல்லவர்கள்தான் (டிஸ்யூ பேப்பர் சோனாக்கள் கவனிக்க). படப்பிடிப்புகளின்போது எனக்கு உதவி செய்த கதாநாயகர்கள் இருக்கிறார்கள். போலி ‘செக்' கொடுத்து என்னை ஏமாற்றிய தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். காதலித்து திருமணம் செய்வதில்தான் எனக்கு நம்பிக்கை. நல்ல காதலனுக்காக காத்திருக்கிறேன்," என்றார்.
எங்கேப்பா அந்த நல்லவன்?

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget