பூட்டிய கதவுகளை திறக்கும் ஸ்வாதி

ராட்டினம் படத்தில் அறிமுகமான ஸ்வாதி, இப்போது பாலசேகரன் இயக்கியுள்ள ஒருவர் மீது இருவர் சாய்ந்து என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த இரண்டு படங்களிலுமே கிளாமர் என்பதை மருந்துக்கும் காட்டாமல்தான் தெறமை காட்டியிருக்கிறார். என்றாலும், அடுத்தடுத்து அவரிடம் கதை சொன்னவர்கள் எல்லாமே கதைக்கு கிளாமர் தேவைப்படுகிறது. அதனால் பூட்டிய கதவுகளை திறந்தால்தான் வேலைக்கு ஆகும் என்று கண்டிசனாக சொல்லி விட்டார்களாம். 
அதனால், இதுவரை நானாவது கிளாமர் காட்டுவதாவது. என்னிடம் ஏகப்பட்ட தெறமை இருக்கிறது என்று எக்கச்சக்கமாக பேசிக்கொண்டிருந்த ஸ்வாதி இப்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டார். அதாவது கதைக்கு அவசியம் என்றால் கிளாமராக நடிப்பேன் என்பதுதான் அது. கவர்ச்சிக்கு தாவும் எல்லா நடிகைகளும் முதன்முதலாக பேசும் வழக்கமான டயலாக் இதுதான். இதுபோதாது நம்முடைய டைரக்டர் அண்ணன்மார்களுக்கு, அவசர அவசரமாக ஸ்வாதியை வரவைத்து விதவிதமான கவர்ச்சி ஆடைகளில் தோலுரித்து போட்டோ செசன் நடத்தி வருகிறார்கள். அதில் ஒருவர், அம்மணியை அயிட்டம் பாடலுக்கு ஆட வைக்கவும் ரகசியமாக திட்டமிட்டுள்ளாராம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget