துப்பாக்கியில் குத்து சண்டை வீராங்கனையாக வரும் காஜல் அகர்வால்


துப்பாக்கி படத்தில் பப்ளி கேர்ளாக வருகிறேன் என்று காஜல் அகர்வால் தெ‌ரிவித்திருந்தார். பப்ளி மட்டுமல்ல பாக்ஸராகவும் கலக்கியிருக்கிறாராம். விஜய் நடிப்பில் வெளியாகும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால் பாக்ஸராக நடித்துள்ளார். இதற்காக அவர் சிறப்புப் பயிற்சி எடுத்ததாகவும் தெ‌ரிகிறது. இந்த கேரக்டருக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை மே‌ரி கோ‌மி‌ன் வீடியோக்களை பார்த்திருக்கிறார் காஜல். மே‌ரியின் பாடிலாங்வேஜை
ஸ்டடி செய்வதற்காக இந்த வீடியோக்களை அவர்
பார்த்திருக்கிறார். அப்படிப் பார்த்து ஒருகட்டத்தில் அவ‌ரின் தீவிர விசிறியாகிவிட்டாராம் காஜல். படத்தில் இவரது கேரக்டர் மற்ற நடிகைகளுக்கு பொறாமை தரும்விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெ‌ரிவிக்கிறார்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget