வசுந்தரா தாஸை நினைவிருக்கிறதா... ? ஒரு பாடகியாக அறிமுகமாகி, தொடர்ந்து கமலின் ஹே ராமில் நாயகியானவர். அஜீத்துக்கு ஜோடியாக பின்னர் சிட்டிசனில் நடித்தார். குஷ்பு ரேஞ்சுக்கு தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டார். வாய்ப்புகளும் குவிந்தன. அவரே வழக்கம் போல, இந்தியில் நடிக்க ஆர்வத்துடன் கிளம்பினார். மான்சூன் வெட்டிங்கில் நடித்தார். ஆனால் திடீரென காணாமல் போனார். பெங்களூரை விட்டு மும்பைக்கே நிரந்தரமாகக் குடியேறிய வசுந்தரா, ஒரு மியூசிக்கில் பேண்டில் பாடிக் கொண்டிருந்தார்.
குரல் பாதிக்கப்பட்டதால் பாடுவதும் நின்றுபோனது. இப்போது நான்கைந்தாண்டுகள் கழித்து பின் நதிகள் நனைவதில்லை என்ற படம் மூலம் மீண்டும் பாடகியாகியுள்ளார்.
இந்தப் படத்துக்கு இசை சௌந்தர்யன். கதை, வசனம் எழுதி நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்குகிறார்.