தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்த ரோஜா தற்போது அம்மன் வேடத்துக்கு மாறியுள்ளார். கன்னடத்தில் உருவாகியுள்ள ஸ்ரீ செளடேஸ்வரி மஹிமே என்ற படத்தில் அம்மன் வேடத்தில் அவர் நடித்துள்ளார்.எப்படி கிருஷ்ணர் வேடம் என்றால் என்.டி.ராமாராவ் நினைவுக்கு வருவாரோ அதேபோல அம்மன் வேடம் என்றால் நினைவுக்கு வருபவர் கே.ஆர்.விஜயாதான். பல படங்களில் அவர் நடித்த அம்மன் வேடங்கள் புகழ் பெற்றுள்ளன.
ஒரு காலத்தில் அம்மன் கதை படங்களுக்கு நலல் கிராக்கி இருந்து வந்தது. அதிலும் கே.ஆர்.விஜயா நடித்த படங்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது. ஒரே நேரத்தில் பல அம்மன் படங்கள் வந்த காலமும் உண்டு.கே.ஆர்.விஜயாவின் காலத்திற்குப் பின்னர் புதிய அம்மன் வேட நடிகைகளாக மீனா, ரோஜா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் உருவெடுத்தனர். இவர்களை அம்மனாக நடிக்க வைத்து நிறையப் படங்கள் வெளியாகின.ரோஜா, தமிழில் பொட்டுஅம்மன் என்ற படத்தில் அம்மன் வேடத்தில் நடித்து பக்திப் பட ரசிகர்களைக் கவர்ந்தார். ரோஜா நடித்த இன்னொரு அம்மன் படம் திருவக்கரை வக்கிரகாளி அம்மன்.அதேபோல ராஜகாளியம்மன் என்ற பக்திப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் அம்மன் வேடத்தில் நடித்தார். கிராபிக்ஸில் மிரட்டிய படம் இது. ரம்யா கிருஷ்ணன் அம்மன் வேடத்தில் இன்னொரு படம்தான் அம்மன். இப்படமும் விறுவிறுப்பாக ஓடி ஹிட் ஆன அம்மன் படமாகும். படத்தின் நாயகியாக நடித்திருந்தவர் மறைந்த செளந்தர்யா இதேபோல இன்னொரு முன்னணி நாயகியான மீனாவும் ஒரு அம்மன் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் பெயர் பாளையத்து அம்மன். இந்தப் படத்திலும் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாகவே இருந்தன. இப்படமும் பக்திப் பட ரசிகர்களைக் கவர்ந்த படம்தான். லேடி சூப்பர்ஸ்டார் என்று ஆந்திர திரையுலகினரால் புகழப்பட்ட விஜயசாந்தியும் கூட அம்மனாக நடித்துள்ளார். அவர் நடித்த படம் பண்ணாரி அம்மன். டி.ராஜேநத்ர்தான் இப்படத்துக்கு இசையமைப்பு. படத்தில் குஷ்புவும் இருந்தார். இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் ஸ்ரீசெளடேஸ்வரி மஹிமே என்ற படத்தில் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார் ரோஜா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள அம்மன் வேடப் படம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.