ஹன்சிகா மோத்வானி, "பிரியாணி படத்தில் நடிப்பதால், மிகவும் உற்சாகமாக இருக்கிறார். இயக்குனர் கேட்டதுமே, உடனடியாக கால்ஷீட் கொடுத்த, ஹன்சிகா, இந்த படத்தில், இரண்டு ஹீரோயின்கள் நடிப்பதாக வெளியான செய்தியால், அதிர்ந்து போனார். இதுகுறித்து, இயக்குனரை தொடர்பு கொண்டு, ஹன்சிகா கேட்டபோது, "நீங்கள் தான் ஹீரோயின். மற்றொரு நடிகை, பாடல் காட்சிக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என, உறுதி அளித்தாராம்.
இதுகுறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது, "பிரச்னை எல்லாம் சரியாகி விட்டது, பாஸ். இப்போது படத்தில் நடிப்பது பற்றித் தான், என் முழு கவனமும் உள்ளது. "பிரியாணி கதை முழுவதும் எனக்கு தெரியும். அசல் பிரியாணி மாதிரியே, பிரியாணி படத்தின் கதையும் செம டேஸ்ட்டா, இருக்கு. காமெடியும் நிறைய இருக்கு... கார்த்திக்கும், எனக்கும் உள்ள ரொமான்டிக் காட்சிகள் டக்கராயிருக்கும் என்றார். கதை குறித்து கேட்டபோது, "கதையா மூச்.. டைரக்டர் டென்ஷனாயிடுவார்... எனக்கு பிடிச்சுருக்கு... தியேட்டருக்கு வரும்போது, உங்களுக்கும் பிடிக்கும் என, கிரேட் எஸ்கேப் ஆனார்.