மருத்துவ குணம் வாய்ந்த உணவு வகைகள்


உணவானது வயிற்றை நிறைப்பதற்கு மட்டும் தான் என்பதில்லை. இந்த உணவு தான் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கிறது. இந்த சக்தியைக் கொடுக்கும் உணவுகள், உடலுக்கு பலத்தை கொடுப்பதோடு, உடலை பல நோய்களை தாக்காமலும் பாதுக்காக்கிறது. உணவுகள் என்றால் அனைவரும் பிடித்த உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவார்கள். சில உணவுகளில் ருசி இல்லாவிட்டாலும்
, அவற்றில் தான் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. சிலர் சாதாரணமாக சிறிதாக உடல் நிலை சரியில்லையென்றாலும், மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் மருந்துகளை பெற்று, அதனை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறு கடைகளில் சென்று பணத்தை செலவழித்து வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, நம் முன்னோர்கள் பின்பற்றி சாப்பிட்டு வந்த உணவுகளை சாப்பிட்டாலே ஒரு சில சிறிய நோயை கூட சரிசெய்யலாம். சரி இப்போது எந்த உணவுகளை சாப்பிட்டால், என்ன நோய் அல்லது பிரச்சனை சரியாகும் என்பதைப் பார்ப்போமா!!! 

சளி மற்றும் ஜலதோஷத்திற்கு இஞ்சி இது ஒரு பழங்கால மருத்துவம். இதனை சளி மற்றும் ஜலதோஷம் இருந்தால், அப்போது ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்ல வேண்டும். இல்லையெனில் அதனை டீ போட்டும் செய்து குடிக்கலாம்.

வலிக்கு மிளகாய் மிளகாயில் உள்ள காப்சைசின் என்றும் பொருள், உடலில் வலி ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் மிளகு சாப்பிட்டால், மூட்டு வலி குணமாகும். 

நீரிழிவிற்கு பாகற்காய் பாகற்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அவை இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைக்கும்.

பேனை போக்கும் ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் மட்டும், அவை பிரபலமானது இல்லை. இந்த எண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்தால், தலையில் உள்ள பேனை முற்றிலும் போக்கலாம். அதுமட்டுமின்றி, ஸ்பால்ப்பில் ஏற்படும் பிரச்சனையும் போக்கலாம். 

மருக்களுக்கு வாழைப்பழம் சருமத்தில் மருக்கள் அதிகம் இருந்தால், அவை உடல் அழகையே கெடுத்துவிடும். ஆனால் அந்த மருக்களை வாழைப்பழம் நீக்கிவிடும். ஏனெனில் அந்த பழத்தில் பொட்டாசியம் இருப்பதால், அவை மருக்களை நீக்கிவிடும். 

துர்நாற்றமுள்ள பாதத்திற்கு ப்ளாக் டீ பாதங்களில் துர்நாற்றம் வருவதற்கு காரணம், ஹார்மோன்கள் தான். ஆகவே அதனை போக்க வெதுவெதுப்பான ப்ளாக் டீயில் பாதத்தை ஊற வைத்து, கழுவினால், அந்த நாற்றத்தை தடுக்கலாம்.

குமட்டலுக்கு எலுமிச்சை எப்போது பயணத்தின் போது வாந்தி வருவது போல் அல்லது குமட்டல் ஏற்படுகிறதோ, அப்போது எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், அதனை சரிசெய்யலாம். 

பழுப்பு நிற சருமத்திற்கு பால் ஓசோனில் ஓட்டை ஏற்பட்டதால், சூரிய வெப்பமானது நேரடியாக சருமத்தை தாக்குகிறது. இதனால் சருமத்தின் நிறமானது பழுப்பு நிறத்தை அடைகிறது. எனவே அடிக்கடி பாலை வைத்து, கழுவி வந்தால், இந்த பிரச்சனையை தடுக்கலாம். 

உடல் வறட்சிக்கு தர்பூசணி உடலுக்கு போதுமான நீர்ச்சத்தானது இல்லையெனில் அவை வறட்சியடைந்துவிடும். அதிலும் தர்பூசணியில் 60 சதவீதம் தண்ணீரானது உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடல் வறட்சியைத் போக்கலாம். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget