ஹாலிவுட் வரலாற்றில் விஸ்வரூபம் வசூல் சாதனை


தமிழகத்தில் அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் விஸ்வரூபம் யுகே, யுஎஸ் ஸில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. யுகே யில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் இந்தியப் படங்களில் விஸ்வரூபம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடம் இந்திப் படமான ரேஸ் 2. ரேஸ் 2 யுகே யில் 76 திரையிடல்களில் 3.02 கோடிகளை வசூலித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் விஸ்வரூபம் 19 திரையிடல்களில் 81.23 லட்சங்களை வசூலித்துள்ளது.
திரையிடலின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் விஸ்வரூபத்தின் ஆவரேஜ் ரேஸ் 2 படத்தைவிட மிக அதிகம்.

யுஎஸ்ஏ யிலும் முதலிடத்தில் ரேஸ் 2 படம் உள்ளது. இப்படம் 153 திரையிடல்களில் 4.77 கோடிகளை வசூலித்துள்ளது. விஸ்வரூபம் 44 திரையிடல்களில் 3.43 கோடிகளை வசூலித்துள்ளது. இங்கும் திரையிடல் எண்ணிக்கையின் ஆவரேஜ் ரேஸ் 2 வைவிட விஸ்வரூபத்துக்கே அதிகம்.

சமீபத்திய எந்த தமிழ்ப் படமும் இங்கு இவ்வளவு பெரிய வசூலை பெற்றதில்லை. 

அமெரிக்காவில் தெலுங்கு விஸ்வரூபமும் வெளியாகியுள்ளது. இது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 28 திரையிடல்களில் தெலுங்கு விஸ்வரூபம் 55.38 லட்சங்களை வசூலித்துள்ளது. இதனை ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். 

2013 ல் யுஎஸ்ஏ யில் வெளியான அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்பட எந்தப் படமும் இதுவரை 25 லட்சங்களைகூட வசூலிக்காத நிலையில் விஸ்வரூபம் தெலுங்குப் பதிப்பு மூன்றே தினங்களில் 55 லட்சத்திற்கு மேல் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு நாடுகளிலும் அடுத்த ஒரு வாரத்துக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையெனில் விஸ்வரூபம் இவ்விரு நாடுகளிலும் வசூலில்; சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget