வாகை சூடிய நாயகி இனியாவின் கலக்கல் பேட்டி


முதல் படத்திலேயே "வாகை சூடிய நாயகி; "மாடலிங் வருகை என்றாலும், அழுக்கு சுமந்த அவரது பாத்திரம், முழு"மதியாய் ரசிகர் மனதில் பதிந்தது. தமிழ் பாரம்பரியம் பளிச்சிடும் முகம் என்றாலும்,  இறக்குமதியானது கேரளாவிலிருந்து. இவ்வளவு கூறிய பின், "சஸ்பென்ஸ் எதற்கு? "சரசர சாரக் காத்து வீசும் போதும்... சாரை பார்த்து பேசும் போதும்... வரிகளுக்கு, வாய்க்கால், வயல்களில் புரண்டு, விழுந்தவர்; சாரி, நடித்தவர், நடிகை இனியா. 
சுருதி சாவந்த் என்ற பெயரை, இனியாவாக மாற்றியது தமிழ் சினிமா. 2005ல் "மிஸ் திருவனந்தபுரம், "டிவி சீரியல்கள், குறும்படங்களில் கலக்கிய இனியா, 2010ல் தமிழில் தலை காட்டினார். "வாகை சூடவா, மவுனகுரு, அம்மாவின் கைபேசி, என, யதார்த்த பாத்திரங்களில் அடைக்கப்பட்டார். அதன் பிறகே, அவர் பிறந்த கேரளாவில், இனியாவிற்கான கதவு திறந்தது. தமிழ், மலையாளத்தில் "பிஸி ஆன இனியா, மாசாணி படப்பிடிப்பிற்கு காரைக்குடி வந்த போது, சிறிது நேரம் மடக்கினோம்; இதோ தன்  இனிமையைப் பகிர்கிறார் இனியா:

முதல் படத்தில் "டீ மாஸ்டர்; முன் அனுபவம் உண்டோ?

அய்யோ... கிச்சன் பக்கம் யார் போனது? படத்திற்காக மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்டவர், கற்றுத்தந்தார். 50 படத்தில் நடித்த அனுபவத்தை, அந்த கதாபாத்திரம் தந்தது. அப்படம் தேசிய விருது வாங்கியதும், அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

தமிழ், மலையாளம் இருபடங்களை வேறுபடுத்தும் விஷயம்?

பிரமாண்டம். தமிழ் படங்களில் எதிர்பார்ப்பை கடந்த பிரமாண்டம் உள்ளது.

மாடர்ன் பொண்ணு, அழுக்காய் நடித்துவிட்டீர்களே?

அழகை விட, கதை தான் முக்கியம். அந்த கதாபாத்திரம் தான், என்னை நிலைக்க வைத்தது.

யதார்த்த நாயகிகள் நீடித்ததில்லை தெரியுமா? 

அனைத்து கதாபாத்திரத்திலும், நடிப்பேன். சேலையில் வந்த என்னை, இனிவரும் படங்களில் பாருங்கள்!

கேரள நடிகைகளுக்கு தமிழ் சினிமா தான் அறிமுக களமா?

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கேரள நடிகைகளின் "தமிழ் படையெடுப்பு தொடர்கிறது. தமிழ் வாய்ப்புக்கு பிறகே, கேரளக் கதவு திறக்கிறது. 

கிளாமர் உங்கள் நிலைப்பாடு என்ன?

சினிமா,ஒரு பொழுது போக்கு; அதில் அனைத்தும் வேண்டும். கவர்ச்சி மீறவும் கூடாது, குறையவும் கூடாது. 

ஹீரோ-டைரக்டர், இனியா யாருக்கு கதாநாயகி?

டைரக்டருக்குத்தான். கதையைப் பொறுத்து, அது மாறுபடலாம், என்றவர், மகிழ்ச்சியுடன், படபிடிப்பிற்குத் தயாரானார். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget