அனைவருக்கும் உடல் எடை பற்றிய கவலை இருக்கும். இதனால் உடல் எடையை குறைப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபடுவோம் அல்லது அதைக் குறைப்பதற்கான பல முறைகளை படித்து தெரிந்து கொண்டு பின்பற்றி வருவோம். அதிலும் அவ்வாறு நிறைய புத்தகங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு படிக்கும் போது, ஒவ்வொரு விதத்தில் இருக்கும். சிலர் உடல் எடையைக் குறைப்பதில்
அதிகம் கவனம் செலுத்தி, சரியாக பின்பற்றி வருவார்கள். சிலரோ அதைப் பின்பற்றி முடியாமல் இருப்பார்கள். அவ்வாறு டயட்டை சரியாக பின்பற்ற முடியாமல் இருப்பவர்கள் கவலை கொள்ள வேண்டாம். அத்தகையவர்களுக்கு ஒரு சில வழிகள் உள்ளன. இந்த உலகில் தீர்வு இல்லாமல் இருக்காது. எனவே அத்தகையவர்கள், உடல் எடையை குறைக்க ஒரு சில உணவுகளை சாப்பிடும் போது சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கலாம். இதுவரை எடையை குறைக்க பச்சை இலைக்காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், தானியங்கள் போன்றவற்றை தான் சாப்பிட வேண்டும் என்று பார்த்திருப்போம். தற்போது ஆச்சரியமூட்டும் சில உணவுப் பொருட்களைக் கொண்டும், உடல் எடையை குறைக்கலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
சாக்லெட்
இப்போது சாக்லேட் சாப்பிடுவதற்கு சூப்பர் காரணம் கிடைத்துவிட்டது. ஏனெனில் சாக்லெட் சாப்பிட்டால், உடல் எடை குறையும், அதிலும் டார்க் சாக்லெட் சாப்பிட்டால், உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் கரைவதோடு, கொழுப்புக்கள் சேராமலும் இருக்கும். எனவே சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், உடல் எடையை குறைக்கலாம்.
பீர்
ஆல்கஹால் பானங்களில் பீரை குளிர்ச்சியாக இருக்கும் போது குடித்தால், உடல் எடை குறையும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை சாப்பிட்டப்பின் வயிறு உப்புசத்துடன் இருந்தால், கவலைபட வேண்டாம். ஏனெனில் உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும். இதனால் எந்நேரமும் பசி ஏற்படும் உணர்வைத் தடுத்து, அதிகம் சாப்பிடுவதை தடுக்கலாம்.
ராஸ்பெர்ரி
நன்கு கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்தில் இருக்கும் ராஸ்பெர்ரி, உடல் எடையை குறைக்கும் தன்மையுடையது. ஏனென்றால் இதில் கீட்டோன் என்னும் நொதிப்பொருள் உள்ளது. இவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.
வோட்கா
ஆல்கஹாலில் ஹாட் எனப்படும் வோட்கா, பிராந்தி, ரம் போன்றவற்றை சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம். குறிப்பாக வோட்கா சாப்பிட்டால், அவை வயிற்றில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, உடலை பிட்டா வைக்க உதவும். எனவே இதனை டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிலும் அளவாக சாப்பிடுவதால், இதன் நன்மையைப் பெறலாம்.
இஞ்சி
இந்த சிறிய இஞ்சியில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இவை சளி, ஜலதோஷம் போன்றவற்றை குணப்படுத்த பயன்படுவதோடு, கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, இதயம் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலம் இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால், உடல் எடையை குறைக்கும் உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
சாக்லெட் கேக்
பசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அப்போது சாக்லெட் கேக் சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கலாம். இதனால் அதிகம் சாப்பிட்டு, உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்க முடியும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தைப் பற்றி நிறைய கட்டுக்கதைகள் உள்ளன. இந்த அதிசயமான உணவுப் பொருள் உடல் எடையைக் குறைக்க உதவும். அதற்கு தினமும் காலையில் 2 வாழைப்பழத்தை சாப்பிட்டு, எந்த ஒரு உணவையும் சாப்பிடலாம். அதனால் அதில் உள்ள கரையாத கார்போஹைட்ரேட், உடலில் சேரும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.
க்ரீக் தயிர்
உடல் எடையைக் குறைக்கும் உணவுப் பொருட்களில் தயிரும் ஒன்று. அதிலும் கொழுப்பு குறைவாக உள்ள தயிரைப் போன்று, க்ரீக் தயிரும் மிகவும் சிறப்பானது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
பீட்ரூட் ஜூஸ்
அந்த சிவப்பு நிற காய்கறியை பச்சையாகவோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ, உடல் எடை குறையும்.
ஆளிவிதை
உடல் எடையை குறைக்க இருக்கும் டயட்டில் ஆளி விதை மிகவும் பிரபலமானது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இந்த குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள விதைகளை சாலட் அல்லது கிரேவிகளில் சேர்த்து சாப்பிடலாம்.