குறும்புக்கார பசங்க சினிமா விமர்சனம்

கந்து வட்டிக்காரனில் இருந்து பார்க்கிறவங்க வரைக்கும் ஒருத்தர் விடாம கடன் வாங்கி அந்த பணத்தில சந்தோஷமா கும்மியடிக்கிறாங்க ஹீரோவும் அவர் நண்பர்கள் மூன்றுபேரும். அந்த ஊரில் செல்வாக்குள்ள மனிதரின் தங்கை காதலித்து ஒருவனுடன் எஸ்கேப் ஆக அதற்கு உதவி செய்துவிடுகிறார் ஹீரோ. இது தெரிந்த அந்த ஆள் நண்பர்கள் ஒவ்வொருவராக தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறார். அவர் திட்டம் நிறைவேறியதா…? ஹீரோ அதை முறியடித்தாரா என்பது க்ளைமேக்ஸ்.

ஹீரோவாக நடித்திருக்கிறார் சஞ்சிவ். முறுக்கு மீசையுடன் வரும் இவர் கூட நான்கு பேரை சேர்த்துக் கொண்டு பஸ் ஸ்டாண்ட் போய் சைட் அடிப்பதும் சாயந்திரம் ஆனால் தண்ணி அடிப்பதையும் தன் கடமையாக செய்கிறார். க்ளைமேக்ஸ் காட்சியில் இவர் கத்தியுடன் தனது நண்பனை பின் தொடருவது செம பரபரப்பான காட்சி.

ஹீரோயின் கேரக்டரில் மோனிகா. கொஞ்சம் சுட்டியான பெண் கேரக்டர். ஹீரோவுடன் பணத்துக்காக அடிக்கடி சண்டை போடுகிறார். பின்னர் பணத்தின் மூலமே இருவருக்குள்ளும் காதல் துளிர் விடுகிறது. இருவரும் சேர்ந்து அய்யனார் கோயில் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவது செம ரொமான்ஸான காட்சி.

ஹீரோவின் அப்பாவாக வருகிறார் பாண்டியராஜன். மகனுக்காக மோனிகாவை பெண் கேட்டுப் போய் அவமானப்பட்டு திரும்புவது நெகிழ வைக்கும் காட்சி. மகன் குறட்டை விடும் சத்தத்தைக் கேட்டு, இவர் தனது பரம்பரையைப் பற்றி உயர்வாக பேசும் இடம் காமெடி.

இன்னொரு நண்பனின் அப்பாவாக வரும் நெல்லை சிவா ஒன்றிரண்டு காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைக்கிறார். ஹீரோவின் நண்பர்கள் ராசாத்தியின் வீட்டிற்கு முகவரி வந்து கேட்பவர்களிடம் விபரம் சொல்லுவது செம ரகளையான காமெடி காட்சி. போலீஸ்காரராக வருகிறார் மனோபாலா. இவரை காலாய்த்துக் கொண்டே இருக்கிறார் இவர் கூடவே வருகிற சக போலீஸ்காரர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சாமிதுரை. நான்கு குறும்புக்கார பசங்களையும், அவர்களின் நட்பு, காதல் போன்றவற்றையும் இந்தப் படத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget