Vicky Cristina Barcelona சினிமா விமர்சனம்


படத்தின் பெயர் உண்மையிலேயே “Vicky and Cristina in Barcelona” என்றுதான் இருந்திருக்கவேண்டும். அதுதான் படத்தின் கதையும். Vicky’யும் (Rebecca Hall) Cristina’வும் (Scarlett Johansson) ஆத்மாந்த நண்பிகள் எனினும் காதல் விடயத்தில் எதிரும் புதிருமான எண்ணப்பாடு கொண்டவர்கள் — மனதுக்குப் பிடித்த, வாழ்க்கைகு ஏற்றவன் ஒருவனோடு வாழ்வில் settle ஆவதற்குத்தான் காதல் என்பது Vicky’யின் கொள்கை; காதல் ஒரு adventure என்பது Cristina’வினது கொள்கை. நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கும் Vicky’யும், சமிபத்தில்
(மீண்டும்) ஒரு காதல் தோல்வியைச் சந்தித்து இருக்கும் Cristina’வும் கோடைக்காலத்தில் சிலமாதங்களை கழிப்பதற்காக Barcelona’வில் (Spain) இருக்கும் Vicky’யின் உறவினர் வீட்டிற்கு வருகின்றனர். மகிழ்ச்சியாக கழிந்துகொண்டிருக்கும் நாட்களில் குழப்பத்தைக் கொண்டுவருகின்றார் அங்கே இவர்கள் சந்திக்கும் ஒரு ஓவியன் Juan (Javier Bardem.) Playboy வகையில் இருக்கும் Juan இலகுவாக Cristina’வின் மனதை கொள்ளை கொண்டுவிடுகின்றான். முதலில் Juan’ஐ வெறுக்கும் Vicky’யும் Juan’இன் மென்மையான மற்றைய முகத்தை அறிந்த பின்னர் Juan’உடன் காதல் வயப்படுகின்றார். இந்த முக்கோணக் காதலில் மேலதிக குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு வந்து சேர்கின்றார் Juan’இன் முன்னாள் மனைவி Maria (Penelope Cruz) — விவாகரத்து எடுத்த நாட்களில் Juan’ஐ கத்தியால் குத்தமுயன்றவர்!! Cristina-Maria-Juan-Vicky-Vicky’யின் எதிர்கால கண்வன் என்று ஒரே காதல் குழப்பம். இந்த குழப்பம் எங்கே சென்று முடிகின்றது என்பது படம்.

படத்தின் நடிகர்கள் எல்லாரும் சிறப்பாகச் செய்திருந்தாலும் துணை நடிகையாக வரும் Penelope Cruz எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றார். ஆங்கிலத்தில் கதைப்பதும், சடாரென ஸ்பானிய மொழிக்கு மாறி பொரிந்து தள்ளுவதுமாக முழுக்கவனத்தையும் ஈர்த்துவிடுகின்றார். இந்தப் பாத்திரத்திற்காக இவர் ஆஸ்காரிற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது முற்றிலும் தகும்!

மெலிதான நகைச்சுவையுடன் மிகவும் அமைதியாக படத்தை எடுத்திருக்கின்றார் Woody Allen (எழுத்தாக்கமும் இவர்தான்.) பின்னணி இசையே இல்லை என்று சொல்லலாம். Woody Allen’ஐ கிட்டத்தட்ட தமிழ்த் திரையுலக பாலச்சந்தரோடு ஒப்பிடலாம். குழப்பமான கதாபாத்திரங்களை முன்வைத்துவிட்டு கேள்விகளோடு படத்தை முடிப்பது இவரின் வழக்கம். இந்தப்படமும் அப்படித்தான். “…and they lived happily ever after” என்பதான முடிவுக்கு சாத்தியமேயில்லை! அப்படியான ஒரு படத்திற்கு நீங்கள் தயாரென்றால் ரசித்துப் பார்க்கக் கூடிய ஒரு படம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget