வண்ணங்கள் என்பது உங்கள் எண்ணத்தை சொல்லாமல் சொல்லக் கூடிய வழி என்பதை மறக்காதீர்கள், முக்கியமாக காதலர் தினத்தன்று மறக்காதீர்கள். காதலர் தினத்தில் ரோஜாக்கள் தருவதும், சிவப்பு நிற உடையில் சென்றால் காதலுக்கு எதிர்ப்பு என்றும், பச்சை நிறமென்றால் காதலுக்கு ஓ.கே என்றும், செல்வதும் வழக்கமான ஒன்று. ஆனால் நிறங்களுக்கு என்றே சில குணாதிசியங்கள் உண்டு.
இது குறித்து புதிதாக யோசித்து புதுவிதமாக காதலை அனுக சில பல கலர் ஃபுல் லவ் சைக்காலஜியை புதுபிக்க பாருங்கள்.
நீங்கள் காதலில் கில்லாடியாகவே இருக்கலாம். எல்லோரையும் வசியப்படுத்தும் கலையும் தெரிந்திருக்கலாம். ஆனால் பர்ஸனாலிட்டி மற்றும் லேட்டஸ்ட்டான கலர் சைக்காலஜி தெரிந்து வைத்திருக்கிறீர்களா எனபதை கவனியுங்கள்.
சிவப்பு: சிவப்பு நிறம் என்றாலே காதல் நிறம். அப்படி என்றால் சிவப்பை விரும்பி அணிபவர்கள் ரொமேன்ஸ் ஏரியாவில் கில்லாடி என்று அர்த்தம். கற்பனையில் தோன்றுவதை மிகச் சுலபமாக சாதித்து விடுவீர்கள். உங்களுக்கு ஆர்வம் மட்டும் வந்துவிட்டால் அவ்வளவு தான். சுலபமாக அந்த ஆர்வத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. உங்கள் ஜோடியும் சிவப்பு நிற ப்ரியராக இருந்துவிட்டால் உங்களுக்கு கொண்டாட்டம் தான் என்பதை மறக்காதீர்கள்.
மஞ்சள்: மஞ்சள் நிற விரும்பிகள் சில ஏரியாக்களில் கொஞ்சம் வீக் தான். முயற்சி செய்தால் அதையும் எளிதில் அடைந்துவிடலாம். உங்களை விட உங்கள் பார்ட்னர் அந்த விஷயத்தில் கில்லாடியாக இருந்தால் அவர்கள் வழியிலேயே போய் அமர்க்களப்படுத்து மிகவும் சிறந்தது.
பிங்க்: பிங்க் நிறத்தை விரும்பும் ஆண்கள் தாராளமான மனம் படைத்தவர்கள். ஆனால் இந்த ஆண்கள் கொஞ்சம் சேட்டை காரர்கள். பல பெண்களுக்கு ஒ.கே. சொல்லிவிட்டு, ஒன்றைக் கூட கவனிக்காமல் விட்டுவிடுவீர்கள். பிங்க் நிறப் பெண் பிரியைகள் தங்களது பெண்மையைக் கொண்டாடுவதில் தான் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். காரணம் ஆண்கள் என்றாலே இந்த பெண்களுக்கு அலர்ஜீ. ஆகையால் இப்பண்களை பதுமை போல காக்க வேண்டும். ஆனால் காதலில் இவர்கள் நம்பகமாந்னவர்கள் என்பதை மறக்காதீர்கள்.
பர்ப்பிள்: இந்த நிற பிரியர்களுக்கு, அவர்களுடைய சந்தோஷம், உணர்வுகள் மட்டுமே முக்கியமானதாக இருக்கும். கொஞ்சம் சுயநலவாதிகள். ஜோடியின் திருப்தியை விட உங்களுடைய முழு திருப்தி மட்டுமே தான் முக்கியம். பர்ப்பிள் நிற ஆண் பிரியர்கள் அந்த விஷயங்களில் கூட ஒரு பிஸினெஸ் மேன் போலவே நடந்து கொள்வீர்கள்.
கறுப்பு: உங்களுக்கு நெருக்கடிகள் இருக்கும் போதோ, அல்லது வருத்தமான சூழ்நிலையில் இருக்கும்போதோ, நீங்கள் அதுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். ஜஸ்ட் லைக் தட் என்ற வார்த்தையே பிடிக்காதவர்கள் நீங்கள். உங்களது அணுகுமுறையில் கொஞ்சம் முரட்டுத்தனமும், பிடிவாதமும் மறைந்து இருக்கும். ஏடாகூடமாகச் செயல்பட விரும்புவீர்கள்.
பச்சை: ப்ரெஷ்ஷராகவும் வெகுளித்தனமான நீங்கள் காதலுக்கு ஏற்றவர்கள். பச்சை நிறத்தை விரும்பும் பெண்கள் தங்களது வாழ்க்கை முழுவதும் தேவதைகளைப் போலவே காதலை மதிப்பீர்கள். ஆண்கள் கொஞ்சம் குழப்பவாதிகள் தான். ஏடாகூடமான ஆட்களாக இருந்தாலும் கொஞ்சம் வசிகரீப்பீர்கள்.
ஆரஞ்ச்: பேண்டஸி சமாச்சாரங்களில் நீங்கள் கொஞ்சம் சாதாரண ரகம் தான். அப்படி என்றால் நீங்கள் கொஞ்சம் பழைய பஞ்சாங்கம் என்று பொருள். அர்த்தமில்லாத டயலாக்குகளை விடுவதை உங்களது இமெஜ் என நினைத்துக் கொள்வீர்கள். ஆரஞ்சு நிற பிரியர்களுக்கு நெருக்கமான காதலில் ஈடுபடாமல் கொஞ்சம் லைட் அன்ட் ஈஸியா இருப்பீங்க, இது உங்க காதலன் காதலிய பெரிதும் பாதிக்கும் என்பதை கவனிக்கவும்.
வெள்ளை: நீங்கள் கொஞ்சம் இல்ல, ரொமபவே சுத்தம் தான். ஆன காதல் விஷயத்தில் கொஞ்சம் அழுக்கா இருந்தா இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும். பெண்கள் அதிக கூச்சமுள்ளவர்களாக இருப்பீர்கள். ஆண்கள் அதிக ஆர்வம் இல்லாமல் கடமைக்கு காதல் செய்பவர்களாக இருப்பீர்கள்.
நீலம்: நீலநிறப் பிரியர்கள் அருமையான பார்ட்னர்களாக இருப்பார்கள். தங்களுடை பார்ட்னர்கள் விரும்புவதை அன்போடும் உணர்ச்சிபூர்வமாகவும் செய்து முடிப்பதில் நீங்கள் சாமர்த்திசாலி. கூலான பர்ஸ்னாலிட்டி உள்ள நீங்க, நீலம் நிற பிரியர்களையே கதலித்தால் கொஞ்சம் சளிப்பு தான். ஆண்கள் பியானோ வாசிப்பவரைப் போல ளினமாகவும், பெண்கள் முழுமனதானவர்களாக காதலை கொண்டாடுவீர்கள்.