4. கண்ணா லட்டு தின்ன ஆசையா
பாக்யராஜின் கதையை திருடி எடுக்கப்பட்ட இப்படம் சென்ற வார இறுதியில் 7.9 லட்சங்களையும், வார நாட்களில் 14.3 லட்சங்களையும் வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. நான்கு வார முடிவில் இதன் சென்னை வசூல் 6.5 கோடிகள்.
3. டேவிட்
வார இறுதியில் 4 லட்சங்களையும், வார நாட்களில் 32 லட்சங்களையும் வசூலித்து டேவிட் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 1.07 கோடி.
2. கடல்
மணிரத்னத்தின் கடல் வார இறுதியில் 20.6 லட்சங்களையும் வார நாட்களில் 82.2 லட்சங்களையும் வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 2.7 கோடிகள்.
1. விஸ்வரூபம்
சென்ற வியாழக்கிழமை வெளியான படம் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நான்கு தினங்களில் 891 திரையிடல்களில் 4.1 கோடிகளை வசூலித்துள்ளது. இதுவரை தமிழில் வெளியான படங்களில் சென்னையின் பிரமாண்ட ஓபனிங் இதுவே.