திகில் ஸ்டார் ஆகும் பவர் ஸ்டார்

இப்போதெல்லாம் படத்துக்கு பூஜை போடும்போதே பவர் ஸ்டாருக்கு போன் போட்டு விடுகிறார்கள். அவர் தலைகாட்டினால் போதும், அவர் முகத்தை காட்டியே படத்தை ஓட்டிவிடலாம் என்று நம்புகிறார்கள். அதுவும் அயிட்டம் கேர்ள் போன்று நடனம் ஆடவும் அழைக்கிறார்கள். இப்போது ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தின் பெயர் "காந்தாரி". ஒரு வீட்டுக்குள் மாட்டிக் கொள்ளும்
காதலர்கள் அந்த வீட்டில் உள்ள பேய்களால் படும் அவஸ்தைகள்தான் கதை. சாட்டை யுவன் ஹீரோ, இசா, பிரதிக்ஷா ஹீரோயின்கள். எம்.கே.குமார் என்பவர் இயக்குகிறார். நடிகரான பவர் ஸ்டார் அந்த வீட்டில் நடக்கும் சினிமா ஷூட்டிங்கில் நடிக்க வருகிறார். அவர் பேயிடம் மாட்டிக் கொண்டு எப்படி திண்டாடுகிறார் என்பது அவரின் காமெடி போர்ஷன். ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம். 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget