ஹ‌ரிப்‌ரியாவும் ஜமீனும்

ஹ‌ரிப்‌ரியா தெலுங்கில் நடித்த பிள்ள ஜமீன்தார் தமிழில் ஜமீன் என்ற பெய‌ரில் வெளியாகிறது. சமீபத்தில் நடந்த ஜமீனின் இசை வெளியீட்டு விழாவுக்கு படத்தின் நாயகன் நானி நே‌ரில் வந்திருந்தார். ஜமீனில் நானியுடன் ஹ‌ரிப்‌ரியா, பிந்து மாதவி இருவரும் நடித்துள்ளனர். இரண்டு நடிகைகள் இணைந்து நடிக்கையில் எழும் நீயா நானா கவர்ச்சிப் போட்டி இதிலும் நடந்திருக்கிறது. அந்த ஒரே காரணத்துக்காகதான் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர் என்ற பேச்சும் உலவுகிறது.
ஜமீன் வெளிவந்தால் ஹ‌ரிப்‌ரியாவுக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். 


இப்படியொரு சூழலில் ஹ‌ரிப்‌ரியாவின் ஃபோட்டோஷூட் ஒன்று ஆந்திராவை கலக்குகிறது. சிவப்பு சேலையில் பீர் பாட்டிலுடன் கவர்ச்சியாக அதில் போஸ் தருகிறார் ஹ‌ரிப்‌ரியா. மது விலக்கு அமலில் இல்லாத மாநிலம் என்றாலும் பெண்கள் மது அருந்தும் காட்சிக்கு உடனடி எதிர்வினையாற்றும் இந்து மக்கள் கட்சி இருக்கிற மாநிலம் தமிழகம். 

ஹ‌ரிப்‌ரியாவையும், பீரையும் தனித்தனியாக அனுமதிப்பார்கள் இரண்டு பேரையும் ஒன்றாக... கஷ்டம்தான். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget