பேஸ்புக் தளத்தை பயன்படுத்தவே நமக்கு மிகவும் பிடிக்கும். இதில் அந்நிறுவனத்தில் வேலைகிடைத்தால்? கலக்கறடா குமாரு தான்... உண்மையில் சிறந்த தொழில்நுட்பங்களுடனும், ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதிலும், உள்கட்டமைப்பு மற்றும் சலுகைகளை வழங்குவது என பேஸ்புக் பல்வேறு சிறப்புகளை சுமந்து தன்னை மேம்பட்டவன் என காட்டிக்கொள்ளவே விரும்புகிறது.
ஆனால் ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலை
கிடைப்பதென்பது அவ்வளவு எளிதான செயலும் அல்ல. திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. அதேபோல் சம்பளங்களும் லட்சங்களில் தானாம். ஏன் ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலைசெய்ய ஆசைப்பட வேண்டும்? நீங்களே பாருங்கள்.
எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் மார்க் ஜுகர்பெர்க், தன் நிறுவன ஊழியர்களிடம் கேள்வி-பதில் நடத்துகிறார். எல்லோரும் பேச வாய்ப்பளிக்கப்படுகிறது.
பேஸ்புக்கில் பணிபுரிபவர்களுக்கு, நிறுவனத்திற்குள் தகவல்கள் பரிமாறிக்கொள்ள கண்டிப்பாக ஃபேஸ்புக் பயன்படுத்துவார்கள் என்பதில் சிறப்பு எதுவும் இல்லை. ஆனால் இதற்காக இவர்கள் சிறப்பு குழுவை[குரூப்] வடிவமைத்திருக்கிறார்கள்.
அமெரிக்க குடிமக்களின் சராசரி மாதசம்பளம் $25,000. ஆனால் பேஸ்புக் இன்டர்ன் முறையில் வருபவர்களுக்கே $67,000 சம்பளமாக தருகிறதென்றால் பாருங்களேன்.
மேலும் இதுபோல பல்வேறு சிறப்புகளை கொண்டதே பேஸ்புக். இதில் வேலை செய்வதென்பது பெருமைப்பட வைப்பதே.