என்னது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயர்ஸ் அத்தனை பேரும் சூதாட்டம் ஆடினாங்களா? எப்படி?
ஆமாம் திடீர்னு பச்சை டிரஸ் போட்டுட்டு இறங்கினா? எங்களுக்கு தெரியாமயா போயிடும்?
கிரிக்கெட் வீரர்: "சத்தியமா நம்புங்க, தலையெல்லாம் ஒரே பேன், சொறியாம என்ன செய்யச் சொல்றீங்க? இப்படி சொறிஞ்சது மூலமா எவ்வளவு கோடி சம்பாதிசீங்கன்னு என்ன போட்டு உயிர எடுத்தீங்கன்னா நியாயமா?"
போலீஸ்: அந்த ஓவர்ல 14 ரன் விட்டுக் கொடுத்தீங்க! சரியா? எவ்வளவு சம்பாதிச்சீங்க?
அருகில் இருந்த அணியின் கேப்டன்: நம்புங்க சார்! உண்மையில அந்த ஓவர்ல 22 ரன் கொடுக்கவேண்டியது. ஏதோ சூதாட்டக் காரங்க தயவால 14 ரன்னோட போச்சு.
இஷாந்த் சர்மா: உடனே என்னோட முடியோட நீளத்தை குறைங்க!
சலூன் காரர்: ஏன் சார் நல்லாத்தானே இருக்கு?
இஷாந்த் சர்மா: ஓடி வந்து பவுலிங் போடும்போது முடி ஆடுது! இது ஏதோ சூதாட்டக்காரங்களுக்கு சிக்னல்னு சொல்லிட்டாங்கன்னா?
போலீஸ்- வீரரிடம்: ஆமாம்! நீங்க ஏன் சூதாட்டக்காரங்களுக்கு பணம் கொடுத்தீங்க?
வீரர்: பின்ன என்ன சார்? பேட்ஸ்மென் கிட்ட போய் என் ஓவர்ல 28 ரன் அடிக்கணும்னு பணம் கொடுத்தாங்க. என் கேரியர் என்ன ஆறது? அதானால 28 வேணாம் 14ஆ குறைச்சுக்க சொல்லுங்கன்னு நான் அவங்களுக்கு பணம் கொடுத்தேன். சண்டைக்காரன் கால்ல விழறதவிட சாட்சிக்காரன் கால்ல விழுந்துரலாமே!
புக்கி: நீங்க இந்த ஓவர்ல ஒரு நோ-பால் ஒரு வைடோட சேர்த்து 17 ரன்கள் கொடுக்கணும்? ஆனால் 15 ரந்தான் கொடுத்தீங்க ஏன்?
வீரர்: சார் நான் நியுமராலஜியில் நம்பிக்கை உள்ளவன் 1+7=8; எட்டுல எனக்கு தோஷம் அதனாலதான் என் ராசி நம்பரான 1+5=6 கொடுத்தேன். இது தப்பா?
போலீஸ்: (இஷாந்திடம்): ஏன் இன்னிக்கு, அதுவும் குறிப்பா, முடிய ஒட்ட வெட்டீனீங்க?
இஷாந்த்: ஏன் சார் இதுல என்ன தப்பு! என் இஷ்டம் நான் வெட்டினேன்!
போலீஸ்: நீங்க இன்னிக்கு ஒட்ட முடிவெட்டுவீங்கன்னு பெட்டிங்ல பல கோடி ரூபா பேரம் நடந்துருக்கு உங்களுக்கு எவ்வளவு பங்கு?
இஷாந்த்: முடிதான் சார்!
போலீஸ்: அந்த சிக்சர் அடிக்கும்போது பந்து உங்க பேட்ல பட்டுச்சாமே?
வீரர்: இது என்ன சார் கூத்து? பேட்ல படாம எப்படி சிக்ஸ் போகும்?
போலீஸ்: அங்கதான் வசமா மாட்டினீங்க? பேட்ல பந்து படறது மூலமா சூதாட்டக்காரங்களுக்கு நீங்க சிக்னல் கொடுத்திருக்கீங்க!
கோச்- பவுலரிடம்: இது என்ன மூஞ்சியெல்லாம் கறுப்பாகி, வேர்த்துக் கொட்டி... டவலை எடுத்து தொடைங்க!
ஸ்ரீசாந்த்: அய்யய்யோ டவலா? அந்த விளையாட்டுக்கே நான் வரல்ல சார்
விசாரணையில் அன்கீட் சவான் கதறி அழுதார் -செய்தி
போலீஸ் அன்கீட் சவானிடம்: நீங்க ஏன் இடது கையிலயே எப்பவும் பந்து வீசினீங்க?
சவான்: இது என்ன சார் நான் எப்பவுமே இடது கை வீசாளர்தான்!
போலீஸ்: அங்கதான் உங்க டிரிக்கை நாங்க கண்டுபிடிச்சோம்! இடது கை பவுலர்தான? பின்ன ஏன் வலது கையை தூக்கி வீசினீங்க?
சவான்; இது என்ன சார் கொடுமை? வலது கையைத் தூக்காம எப்படி இடது கையால வீச முடியும்?
போலீஸ்: கரெக்ட்! வலது கையை தூக்கினீங்கன்னு ஒப்புக்கொள்றீங்க! இதுதான் நீங்க கொடுத்த சிக்னல்னு நாங்க சொல்றோம்!
சவான்: தலையில் அடித்துக் கொண்டு 'எனக்கு வேணும் எனக்கு வேணும்' என்று கதறி அழுகிறார்!
போலீஸ்: உங்க போன்லேர்ந்து 'புஜ்ஜு'ங்கற பேர் உள்ளவருக்கு ஒரே நாள்ல 15 கால் போயிருக்கு!
வீரர்: சார் அது என்னோட குழந்தை, செல்லமா புஜ்ஜுன்னு கூப்பிடுவோம்.
மீடியா: மற்றப் பிரச்சனைகளை மறைக்க இந்த பெட்டிங் விவகாரத்தை கிளப்பியிருக்கீங்க இல்ல?
போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார்: அப்படியெல்லாம் பேசாதீங்க! இதுக்காக நாங்க எவ்வளவு அறுவ மேட்சையெல்லாம் பாக்கவேண்டியிருக்கு! எங்க கஷ்டத்தையும் கொஞ்சம் பாருங்க!
ஆமாம் திடீர்னு பச்சை டிரஸ் போட்டுட்டு இறங்கினா? எங்களுக்கு தெரியாமயா போயிடும்?
------------------------------------------------------------------------------------------
அருகில் இருந்த அணியின் கேப்டன்: நம்புங்க சார்! உண்மையில அந்த ஓவர்ல 22 ரன் கொடுக்கவேண்டியது. ஏதோ சூதாட்டக் காரங்க தயவால 14 ரன்னோட போச்சு.
------------------------------------------------------------------------------------------
இஷாந்த் சர்மா: உடனே என்னோட முடியோட நீளத்தை குறைங்க!
சலூன் காரர்: ஏன் சார் நல்லாத்தானே இருக்கு?
இஷாந்த் சர்மா: ஓடி வந்து பவுலிங் போடும்போது முடி ஆடுது! இது ஏதோ சூதாட்டக்காரங்களுக்கு சிக்னல்னு சொல்லிட்டாங்கன்னா?
------------------------------------------------------------------------------------------
வீரர்: பின்ன என்ன சார்? பேட்ஸ்மென் கிட்ட போய் என் ஓவர்ல 28 ரன் அடிக்கணும்னு பணம் கொடுத்தாங்க. என் கேரியர் என்ன ஆறது? அதானால 28 வேணாம் 14ஆ குறைச்சுக்க சொல்லுங்கன்னு நான் அவங்களுக்கு பணம் கொடுத்தேன். சண்டைக்காரன் கால்ல விழறதவிட சாட்சிக்காரன் கால்ல விழுந்துரலாமே!
------------------------------------------------------------------------------------------
வீரர்: சார் நான் நியுமராலஜியில் நம்பிக்கை உள்ளவன் 1+7=8; எட்டுல எனக்கு தோஷம் அதனாலதான் என் ராசி நம்பரான 1+5=6 கொடுத்தேன். இது தப்பா?
-------------------------------------------------------------------------------------------
இஷாந்த்: ஏன் சார் இதுல என்ன தப்பு! என் இஷ்டம் நான் வெட்டினேன்!
போலீஸ்: நீங்க இன்னிக்கு ஒட்ட முடிவெட்டுவீங்கன்னு பெட்டிங்ல பல கோடி ரூபா பேரம் நடந்துருக்கு உங்களுக்கு எவ்வளவு பங்கு?
இஷாந்த்: முடிதான் சார்!
-------------------------------------------------------------------------------------------
வீரர்: இது என்ன சார் கூத்து? பேட்ல படாம எப்படி சிக்ஸ் போகும்?
போலீஸ்: அங்கதான் வசமா மாட்டினீங்க? பேட்ல பந்து படறது மூலமா சூதாட்டக்காரங்களுக்கு நீங்க சிக்னல் கொடுத்திருக்கீங்க!
------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீசாந்த்: அய்யய்யோ டவலா? அந்த விளையாட்டுக்கே நான் வரல்ல சார்
----------------------------------------------------------------------------------------------